headlines

img

பாதி உண்மைப் பசப்பல்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி யாரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொல் கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது கூறியிருக்கிறார். நீதிமன்றத்தில் உண்மையை தவிர வேறொன்றுமில்லை என்று சத்தியம் செய்து விட்டு பொய்யையே பேசுவதுபோல அமித்ஷா அந்த பொதுக்கூட்டத்தில் புளுகியிருக்கிறார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கும்வரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஓயாது என்றும் அவர் அளந்துவிட்டி ருக்கிறார். 

மகாபாரதத்தில் யுத்தக் களத்தில் அஸ்வத் தாமா எனும் குதிரை இறந்துவிட்டது என்று தர்ம னால் உரக்க கூறச்செய்து எதிர் அணியின் தலைவ ராக இருக்கும் துரோணாச்சாரியாரை தன் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக தவறாக புரிந்து கொள்ள வைப்பார்கள். அதன்மூலம் அவரது உள்ள உறுதியை குலையச் செய்வார்கள்.  அதுபோன்ற முறையிலேயே அமித்ஷா அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை என்று கூறுவதில் பாதி உண்மையே பொதிந்திருக்கிறது. ஏனெனில் அனைத்து அகதிகளுக்கும் என இவர்கள் கூறுவது பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான், வங்கதேசம் ஆகியவற்றிலிருந்து வந்த மத சிறுபான்மையினருக்கு (இந்துக்கள்) மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்றே இவர்கள் கொண்டு வந்த சட்டம் கூறுகிறது.

அவ்வாறு இல்லையெனில் இத்தகைய சொல்லாடல் தேவையில்லை. ஏனென்றால் பிற நாடுகளிலிருந்து வந்திருக்கும் அகதிகளான இலங்கை தமிழர்கள், மியான்மரின் ரோகிங்யாக் கள் போன்றவர்களும் மற்றும் இதர நாடுகளின் அகதிகளும் இந்த சட்டத்தின்படி பயனடை யவே முடியாது.  அதுமட்டுமின்றி,  நாட்டில் உள்ள ஏழை, எளிய உழைப்பாளி மக்கள், உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்து பிழைப்பு நடத்துபவர்கள் என கோடிக் கணக்கானோர் குடியுரிமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்தி யாவில் மதச் சிறுபான்மையினராக இருப்ப வர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த சட்டத்திற்கு எதிராக வீதி களில் இறங்கி அமைதியாக தங்களது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக ஜன நாயக நாட்டில் தங்களது கருத்துக்களை தெரி விப்பது அடிப்படை உரிமை. ஆனால் தற்போ தைய பாஜக ஆட்சியாளர்களோ எதிர்க்கருத் துக்களை வெளிப்படுத்துவதே மிகப் பெரும் குற்றம் என்று அரசு இயந்திரம் மூலமாகவும், ஆர்எஸ்எஸ், பாஜக ஆசி பெற்ற கும்பல்கள் மூலமாகவும், கொலைவெறி தாக்குதல்களை நடத்தி உயிர்குடித்து வருகின்றனர்.  அதனால்தான் மக்களது போராட்டம் நாடு முழுவதும் மென்மேலும் அதிக வீச்சு டன் பரவிக் கொண்டிருக்கிறது. அதனை சமாளிப்பதற்காகவே யாரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என்று அமித்ஷா கூறு கிறார். உண்மையை மறைக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெறாது.

;