headlines

img

ஆபத்து நீங்கியது ஆனாலும்...

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு நடத்து வதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்வுகள்  ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறி வித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. இந்த தேர்வு களை நடத்தக் கூடாது என்று கல்வியாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசி யல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இதை ஒரு கவுரவப்பிரச்சனையாக கருதாமல் தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பது நல்லது.

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் கல்வித் தரம் உயரும் என்று முன் வைக்கப்பட்ட வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. மாறாக, பள்ளியிலிருந்து இடைநிற்றல் மூலம் வெளியேறும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் அபாயம் இருந்தது. இந்த தேர்வுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து மாணவர்கள் மத்தியில் மட்டுமின்றி பெற்றோர் மத்தியிலும் பெரும் அச்சம் எழுந்தது. கடும் உள வியல் நெருக்கடிக்குள்ளானார்கள். அதிலும், அவரவர் படிக்கும் பள்ளிகளில் தேர்வு எழுதக் கூடாது, பக்கத்திலுள்ள பள்ளிகளுக்கு சென்று தான் தேர்வு எழுத வேண்டும் என்று வந்த தகவல் பீதியை அதிகரித்தது.  அரசு இதை மறுத்த போ தும்கூட தேர்வுக்குறித்த அச்சமும் மனநெருக்கடி யும் அகன்றபாடில்லை. 

மோடி அரசு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவை வெளியிட்டுள்ளது. அந்த வரைவில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தத் தேர்வுக ளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்ப டையில்தான் அவர்களது எதிர்க்கால படிப்பு தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள் ளது. மாணவர்களை தரம்பிரிப்பது என்ற பெயரில் பெரும்பகுதி மாணவர்களை தகுதியற்றவர்கள் என்ற பெயரில் கல்விக்கூடங்களை விட்டு விரட்டும் கபடத்தனமான திட்டமாகும் இது. இதற்கு முன்னோட்டமாகவே தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு திணிக்கப் படுகிறதோ என்ற அச்சம் கல்வியாளர்கள் மத்தி யில் எழுந்தது. மேலும், இந்த பொதுத் தேர்வுக ளில் தேர்ச்சிப்பெறாத மாணவர்கள் அதே வகுப்பு களில் நிறுத்தி வைக்கப்படுவது என்பது அவர்க ளது கல்வியை தொடரவிடாமல் தடுத்துவிடும். இடை நிற்றல் பெருமளவில் அதிகரிக்கும் என்ற அச்சம் நியாயமாக முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், பொதுத் தேர்வு இல்லை என்ற அறிவிப்பு சற்று நிம்மதி அளித்தபோதும் தமி ழகத்தில் ஒருபோதும் இத்தகைய தேர்வுகளை நடத்தமாட்டோம் என அரசு அறிவிப்பதன் மூலமே மாணவர்களின் உளவியல் நெருக்க டியை தவிர்க்க முடியும்.  அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, போதுமான ஆசிரி யர்களை நியமிப்பது கற்றல், தேர்ச்சி குறைவான மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டுமே அன்றி தரத்தை உயர்த்துவதாக கூறிக்கொண்டு அடுக்கடுக்காக பொதுத் தேர்வுகளை அறிவிப்பது மாணவர்களை அச்சுறுத்துமே அன்றி தரம் மேம்படாது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு நிரந்தரமான ஒன்றாக இருக்க வேண்டும்.

 

;