headlines

img

கொரோனா நோய்த் தடுப்பு: அறிவியலும், போலி அறிவியலும் - அன்புநாதன்

ரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராகப் பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் நடவடிக்கை ஊரடங்கு. போக்குவரத்து, பொருள் உற்பத்தி, சந்தை முதலியவற்றை மூடிவிட்டு மக்களை வீட்டுக்குள்ளேயே அடங்க செய்து கொரோனா வைரஸ் தொற்றின் வேகத்தை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவிலும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. ஆயினும் தொற்று நோய்க்கு ஊரடங்கு என்பது மருந்து அல்ல. ஊரடங்கு விலக்கிய பின்னர் மறுபடி தொற்று நோய் பரவக்கூடும். அப்படியானால் மறுபடி மறுபடி ஊரடங்கு சாத்தியமா? அநேகமாக சாத்தியமில்லை. அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

மந்தை நோய் எதிர்ப்பாற்றல் சரியானதா?

பிரிட்டிஷ் அரசின் தலைமை அறிவியல் ஆலோ சகர் பேட்ரிக் வாலென்ஸ் கடந்த மாதத்தில் கூறினார் : “ஊரடங்கு செய்து பொருளாதாரத்தை முடக்கக் கூடாது. மக்கள் எப்போதும் போல இயங்க வேண்டும். இதனால் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலும், உயிரிழப்பும் அதிகரிக்குமே என்றால் ஆமாம்; அதிகரிக்கும். மக்க ளில் சுமார் 60 சதவிகிதம் பேருக்கு இந்த நோய் தாக்கு தல் ஏற்பட்டால் ‘மந்தை நோய் எதிர்ப்பாற்றல்’ (Herd Immunity) அதாவது நோயை எதிர்ப்பதற்கான சமூக ஆற்றல் ஏற்பட்டுவிடும். அத்துடன் இந்த நோய் ஒழிந்து விடும் ” என்று அவர் கூறினார். 

இதற்கு மருத்துவ வல்லுநர்கள், பொதுமக்கள் ஆகி யோரிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது. உடனே “மந்தை நோய்எதிர்ப்பாற்றல் என்பது அரசின் கொள்கை அல்ல” என்று பிரிட்டிஷ் அரசின் சுகாதா ரத் துறை அமைச்சர் மாட் ஹான்காக் அறிவித்தார். அரசு பின்வாங்கியது.

ஆனால் இப்போது இந்தியாவில் சில வல்லு நர்கள் மந்தை நோய்எதிர்ப்பாற்றல் கொள்கையை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும்; இதுதான் அறிவியல் கண்ணோட்டத்தில் சரியானது என்று கூறு கிறார்கள். இதற்கு ஆதரவாக வைக்கப்படும் வாதங்கள் என்ன? 

ஊரடங்கு என்றெல்லாம் ஓடி ஒளியாமல் இந்தக் கொரோனா கிருமியை சந்தித்தால் என்னவாகும்? இது வரை உள்ள தடயங்களின் அடிப்படையில் பார்த்தால் ஒரு தடவை ஒருவருக்கு இந்த கிருமி தொற்று ஏற்பட்டு குணமானால் மறுமுறை அவரிடம் இந்த கிருமி வாலாட்ட முடியாது. எடுத்துக்காட்டாக ஒருதடவை தட் டம்மை நோய் வந்து குணமானால் மறுமுறை வருவது அபூர்வம்; விதிவிலக்கு. அதே போல தான் இந்த வைரஸும் ஒருதடவை தீண்டினால் மறுமுறை அண்ட முடியாது. 

இரண்டாவது, இதன் கடுமை எல்லோரிடமும் ஒரே மாதிரி இல்லை. அதாவது இந்த கிருமியால் மரணம் அடைபவர்களில் பெரும்பாலானோர் வயது மூத்த வர்கள். இந்தியாவைப் பொறுத்தவரை 55 வயதுக்கும் அதிகம் உள்ளோர் மக்கள் தொகையில் வெறும் 12 சதவீதம்தான். 

மூன்றாவது, இளையவர்களிடம் இந்த நோயின் கடுமை வெகு குறைவு. வெறும் 0.2 % மட்டுமே. ஒரு ஆண்டில் இந்தியாவில் பாம்புக்கடியால் மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை ஐம்பதாயிரம். ஒரு ஆண்டில் காசநோயில் மடிபவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? சாலை விபத்தில் மடிபவர்கள் எண் ணிக்கை எவ்வளவு. ஒப்பிட்டு பார்த்தல் இதை ஒரு பொருட்டாக எடுக்க வேண்டுமா? இவைதான் அவர்களது வாதம். 

மேலே கூறிய மூன்றையும் நாம் ஒப்புக்கொண் டால் கொரோனாவிலிருந்து விடுபட எளிதான வழி உள்ளது. முடிந்தவரை முதியவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; இளையோரிடம் இந்த நோய் மெதுவாகப் பரவித் தாக்க அனுமதிக்க வேண்டும்; இவ்வாறு மொத்த மக்கள் தொகையில் சுமார் 60 சதவிகிதம் பேருக்கு இந்த நோய் ஏற்படச் செய்ய வேண்டும். அதில் வெகு சிலரே மடிந்து போவார்கள். ஆனால் சமூகம் முழுமைக்கும் “மந்தை நோய்தடுப்பாற்றல்” (herd immunity) ஏற்பட்டுவிடும். நோய் ஒழிக்கப்பட்டு விடும்.

இதன் மூலம் மடியப்போவது யார்? பெரும்பாலும் வயது மூத்தவர்கள் தானே. அவர்கள் எப்படியும் இன்று இல்லை என்றால் நாளை மடியத்தானே போகி றார்கள். எவ்வளவு காலம் தான் ஊரடங்கும் பொருளா தார முடக்கமும் நடைமுறை சாத்தியம்? எனவே மந்தை நோய்த்தடுப்பாற்றல் கொள்கையைச் செயல்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதுதான் அறிவியல் கண்ணோட்டம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இவை போலி அறிவியல் வாதங்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். 

‘மந்தை நோய்தடுப்பாற்றல்’ (herd immunity) என்பது தடுப்பூசி தொடர்பானது. மனித சமூகத்தில் எத்துனை சதவிகிதத்துக்கு தடுப்பூசி போட்டால் கிருமியை அழித்து ஒழித்துவிடலாம் என்பதை கணி தம் செய்யும் எண் தொகை தான் ‘மந்தை நோய் தடுப்பாற்றல்’ எனும் கருத்து. நோய் கிருமி பரவு விகி தம் எனப்படும் R0 என்ற எண்ணுடன் தொடர்புடை யது. கிருமி தொற்றிய ஒரு நபர் சராசரியாக எவ்வளவு பேருக்கு அந்த குறிப்பிட்ட கிருமியை பரப்புவார் எனும் விகிதமே R0 எனும் கிருமி பரவு விகிதம். (R என்பது ரீபுரடக்சன்; ஜீரோ என்பது அடிப்படை இனப்பெருக்க எண். கொரோனா வைரசை பொறுத்தவரை 2.6, அதா வது, கொரோனா தொற்றிய ஒரு நோயாளி சராசரியாக 2.6 பேருக்கு நோய் கிருமியை பரப்புவார்.)

தடுப்பூசிக்கான இந்த கருத்தை சாவுகளை ஏற்படுத்தும் விதமாக கிருமி பரவி காலப்போக்கில் அந்த கிருமிக்கு எதிரான நோய் தடுப்பாற்றலை சமூகம் முழுவதும் ஏற்படுத்துவது என விளக்குவது போலியே ஆகும். 

உண்மையான பிரச்சனை என்ன?

உலகளவில் அரசுப் பொது சுகாதார அமைப்புக் கள் போதுமான வலிமை கொண்டு இல்லை. மருத்து வர்கள் பற்றாகுறை, மருத்துவ ஊழியர் பற்றாக்குறை என்பதிலிருந்து துவங்கி மருத்துவ அமைப்பு செய்வ தறியாது திகைத்து நிற்கிறது. தாராளமய, தனியார்மய கொள்கைகள் தீவிரமாக அமுல் படுத்தப்பட்ட அமெ ரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, நாடுகளில் திகைப்பும் மலைப்பும் கூடுதலாக இருக்கிறது. சோஷ லிசப் பாதையில் செல்லும் சீனாவில் இந்த நோயை விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்தது போல, தாராள மயக்கொள்கையை தீவிரமாக கடைபிடித்த இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் முடியவில்லை. 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் பலவும் தாரளமய, உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணாக அமைகிறது. சந்தை தான் தீர்மானிக்கவேண்டும் என்றால் இந்தியா கொள்முதல் செய்த மருத்துவக் காப்பு பொருள்களை அமெரிக்க அரசு எப்படி கொள்ளை அடித்து போனது? தாராளமய கொள்கையின் தாயகமான அமெரிக்கா விலும் மருத்துவ காப்பீடு எனும் முறையை கைவிட்டு அனைவருக்கும் இலவச மருத்துவம் எனும் முறையை கைக்கொள்ள வேண்டி வருகிறது. ஸ்பெயின், அயர் லாந்து போன்ற நாடுகள் மருத்துவ துறையில் தனி யார்மயம் என்ற கொள்கையை கைவிட்டுவிட்டு தனி யார் மருத்துவமனைகளை அரசுடமையாக்கியுள்ளது.

இவை முதலாளித்துவ கருத்தாளர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே தான் இங்கி லாந்து, பிரேசில், அமெரிக்கா உட்பட வலதுசாரி அர சாங்கங்கள் கொரோனா கிருமி தொற்றினை சட்டை செய்யாமல் இருந்தனர். பிறகு வேறு வழி இன்றி ஊர டங்கு போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டாலும் உடனடி யாக தங்கள் நாடுகளில் பொருளாதாரம் மற்றும் பொரு ளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாதிருப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதை முதன்மைப் படுத்துகிறார்கள். நேரடியாக அல்லது மறைமுகமாகப் பலர் மடிந்தாலும் தாராளவாத பொருளாதார அமைப்பு உடைபடாமல் பாதுகாக்க முயல்கின்றனர். 

இதன் தொடர்ச்சியாகத் தான் ‘மந்தை நோய்தடுப் பாற்றல்’ (herd immunity) என்ற அறிவியல் கருத்தை போலியாக விளக்கி சமாதானம் செய்ய முயல்கின்ற னர். தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்குத் தேவை யான தடுப்பு நடவடிக்கைகளைக் கடுமையாக எடுப்ப தற்குப் பதிலாக, மக்களைத் நோய் தொற்றிக்கொள்ள அனுமதிப்பது என்ற போலி அறிவியல் பார்வையை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல இலைமறை காய்மறையாக ஏற்றுகிறார்கள். இந்த மந்தை நோய்தடுப்பாற்றல் அணுகுமுறைக்கு சமூக முடக்கம், பெரிய அளவில் தனிமைப்பட்டிருத்தல் அல்லது இயல்பு நடவடிக்கைகளைச் செய்யாமல் சமூகரீதி யாக தூர விலகியிருத்தல் போன்றவை தேவை இல்லை. அனைவருக்கும் இலவசமான தீவிரமான மருத்துவச் சோதனையோ, சிகிச்சையோ தேவை இல்லை. தாராளமாய பொருளாதார அமைப்பு அப் படியே நிலைநிற்கும். பொருளாதார மந்தம் என்ற பூச்சாண்டியை காட்டி அனைவருக்கும் ஆரோக்கியம் என்பதை மறுப்பதற்கான வாதமே ‘மந்தை நோய் தடுப்பாற்றல்’ (herd immunity) எனும் தீர்வு. 

நெருக்கமான குடியிருப்பு, பணியிடத்தில் நெருக் கம் முதலியவற்றை அனுபவிப்பதும் நோய்த் தாக்கு தலுக்கு எளிதில் ஆளாவதும் ஏழை எளிய மக்களே. ‘மந்தை நோய்தடுப்பாற்றல்’ (herd immunity) செயல்படுத்தப்பட்டால் மடியப்போகிறவர்களில் பெரும் எண்ணிக்கை சமூகத்தின் அடித்தட்டில் இருப்ப வர்களாக தான் அமைவார்கள்.

எனவே ஊரடங்கு உள்ளிட்ட உடனடி நடவடிக்கை களைச் செயல்படுத்த வேண்டும். அதே நேரத்தில், மீண்டும் மீண்டும் தாராளமயப் பொருளாதாரப் பார்வை யிலேயே சிக்கலுக்குத் தீர்வு காண முயற்சிக்கக் கூடாது. மருத்துவக் கல்வி, மருத்துவ வசதி தனியார்மயமாக்க லைக் கைவிட வேண்டும். மாறாக பொது மருத்துவக் கல்வி, பொது மருத்துவம் உள்ளிட்ட மாற்றுப் பொருளா தார அமைப்பை வலியுறுத்த வேண்டும்.
 

;