headlines

img

பன்முகத் திறன் கொண்ட கலைஞரின் நூற்றாண்டு

தமிழ்நாட்டின் முதல்வராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் விளங்கிய கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு இன்று (ஜூன் 3) துவங்குகிறது.

நவீன தமிழக அரசியல் வரலாற்றை கலை ஞரை தவிர்த்துவிட்டு யாரும் எழுதி விட முடியாது. பன்முகத் திறன் கொண்ட அவர் கலைத்துறையி லும், இலக்கியத்துறையிலும், இதழியல் துறை யிலும், நிர்வாகத்துறையிலும் அழுத்தமான முத்திரைகளை பதித்துள்ளார். 

1969இல் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக பணியாற்றி யுள்ளார். 1957ஆம் ஆண்டில் தமிழக சட்டப் பேர வைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், தாம் போட்டி யிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

அவசர நிலைக் காலத்தின் போது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு அவர் உறுதியாக பணியாற்றியது என்றென்றும் நினைவு கூரப்படும். அதேபோன்று  மாநில உரிமைகளுக்காகவும், மாநில சுயாட்சிக் காகவும் அவர் அயர்வின்றி களமாடியுள்ளார்.

பெரியார் நினைவு சமத்துவபுரம், வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரியில் திருவள்ளுவ ருக்கு சிலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அருந்ததிய அமைப்புகளின் வேண்டு கோளை ஏற்று அருந்ததிய மக்களுக்கு உள்ஒதுக் கீடு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக் கீட்டின் ஒரு பகுதியாக இஸ்லாமியர்களுக்கு தனி ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்துரிமை என அவரது தனித்த சாதனைகள் என்றென்றும் தமிழக மக்களால் நினைவு கூரப்படும்.

இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவப் பரு வத்திலேயே பொது வாழ்க்கைக்கு வந்த அவர், தனது இறுதிக் காலம் வரை பொது வாழ்வில் பணி யாற்றியதன் மூலம் நீண்ட நெடிய பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார். 

தன்னுடைய துடிப்புமிக்க வசனங்களின் மூலம் தமிழ் திரையுலக வரலாற்றில் தனித்தடம் பதித்தவர் அவர். இளம் வயதிலேயே முரசொலி ஏட்டை துவக்கி நடத்திய அவர் இந்தியஅளவில் ஒரு முன்னுதாரணமான ஊடகவியலாளராக விளங்கினார். இலக்கியத்துறையிலும் அவரு டைய பங்களிப்பு அசாத்தியமான ஒன்று. 

தீக்கதிர் நாளேட்டின் முதன்மையான வாச கர்களில் ஒருவராக விளங்கிய அவர், தீக்கதிர் சுட்டிக்காட்டிய பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். தீக்கதிர் வெளியிட்ட பெரும்பா லான மலர்களுக்கு வாழ்த்துரைவழங்கியுள்ளார். 

மதவெறி சக்திகளுக்கு எதிரான விரிந்து பரந்த களத்தையும், ஒற்றுமையையும் கட்ட வேண்டிய இன்றைய சூழலில் அவர் முன்வைத்த பகுத்தறி வும், சுயமரியாதைக் கருத்துக்களும், மாநில உரிமை முழக்கங்களும் சமூக சீர்திருத்த நடவடிக்கை களும் ஜனநாயக சக்திகளுக்கு வலுவூட்டக்கூடி யதாக அமைந்துள்ளன. தமிழக அரசியலையும்  தாண்டி இந்திய அளவில் மதிக்கத்தக்க தலை வர்களில் ஒருவராக விளங்கிய அவரது நூற்றாண்டு மதச்சார்பற்ற அரசியல் களத்திற்கு வலிமை சேர்ப்பதாக அமையட்டும்.

;