headlines

img

தமிழகத்தில் ஒரே நாளில் 69 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 4,421-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 114-ஆக உயா்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் வீரியம் குறையவில்லை. செவ்வாயன்று மட்டும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்களன்று 621 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 690 ஆக அதிகரித்துள்ளது. மரணம் 7 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து செவ்வாயன்று சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 66,431 பேர் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் உள்ளனர். அரசு கண்காணிப்பில் 253 பேர் உள்ளனர். 28 நாட்கள் தனிமையை நிறைவு செய்தவர்கள் 27,416. செவ்வாயன்று 3,305 பேருக்கு ரத்தமாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. தில்லி சென்று திரும்பியவர்களில் 1,630 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 961 பேருக்கு தொற்று இல்லை. 33 பேரின் முடிவுகளுக்காக அரசு காத்திருக்கிறது. இதற்கிடையில்  சென்னையில் ஒரு நாள் கண்காணிப்பில் இருந்த சென்னையைச் சேர்ந்த 64 வயது பெண் செவ்வாயன்று உயிரிழந்தார். ரேபிட் டெஸ்ட் பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.

செவ்வாய்க்கிழமை  மாலை ஆறு மணி நிலவரப்படி மாவட்ட வாரியாக கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் விபரம்:-

சென்னை-149, கோயம்புத்தூர்-60, திண்டுக்கல்-45, திருநெல்வேலி-38, ஈரோடு-32, திருச்சிராப்பள்ளி-30, நாமக்கல்-28, இராணிப்பேட்டை-27, செங்கல்பட்டு-24. மதுரை-24, கரூர்-23, தேனி-23, தூத்துக்குடி-17, விழுப்புரம்-16, திருப்பூர்-16, கடலூர்-13, சேலம்-12, திருவள்ளூர்-12, திருவாரூர்-12, விருதுநகர்-12, தஞ்சாவூர்-12, நாகப்பட்டினம்-11, திருப்பத்தூர்-11, திருவண்ணாமலை-11, கன்னியாகுமரி-6, காஞ்சிபுரம்-6, சிவகங்கை-5, வேலூர்-5, நீலகிரி-4, கள்ளக்குறிச்சி-2, இராமநாதபுரம்-2, அரியலூர்-1, பெரம்பலூர்-6.

 

;