headlines

img

நீதித்துறையிலும் படியும் கருநிழல்

நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் எடுக்கும் முடிவுகளை ஒன்றிய அரசு புறக்கணித்து காலதாமதம் செய்து வருவதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதித்துறையிலும் ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் தலையீடு அதிகரித்து வருகிறது. இதனால் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. தங்களுக்கு வேண்டியவர்களை உடனடியாக நியமிக்க ஒப்புதல் வழங்குவதும், வேண்டாதவர்களை புறக்க ணிப்பதும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் கொலிஜியம் பரிந்துரைத்த சிலரது பெயர்களை ஒன்றரை ஆண்டுகளாக தாமதம் செய்தது ஏன்? பரிந்துரை பட்டியலில் ஒரு சிலரை மட்டும் தேர்ந்தெடுப்பதால் சீனியாரிட்டி பாதிக்கப்படுகிறது என்றும் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்க ளவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் சட்ட அமைச் சகத்திற்கு ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். கடந்த ஒரு வருடத்தில் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையால் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை குறித்த விபரங் களை அவர் கேட்டிருந்தார். 

இதற்கு பதிலளித்த ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ நீதிபதிகள் காலிப்பணியிடங்க ளை நிரப்புவதற்கான காலக் கெடுவை தெரி விக்க முடியாது என்று கூறியிருந்தார். சட்ட அமைச்சரின் இந்த பொறுப்பற்ற பதிலுக்கும் உச்ச நீதிமன்றம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கொலி ஜியம் குறித்த உயர் பொறுப்பில் உள்ள ஒருவரின் இந்த பதில் ஏற்கத்தக்கதல்ல என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

கொலிஜியம் 80 பரிந்துரைகளை செய்துள்ளது. அதில் 45 நியமனங்கள் மட்டுமே செய்யப்பட்டுள் ளன என்று ஜான் பிரிட்டாஸ் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்றம் காலக்கெடுவை தீர்மானித்துள்ள நிலையில், அமைச்சர் அதற்கு முரணாகப் பேசுவது தவறு  என்று அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக் கத்தக்கது.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் கூட ஒன்றிய அரசு தன்னுடைய பொறுப்பற்ற போக்கையே வெளிக்காட்டியுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அரசின் தலையீடு எந்த வகை யிலும் இருக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தி லும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் அரசியல் பாரபட்சத்துடன் மோடி அரசு செயல்படு கிறது என்பது தொடர்ந்து எழுந்து வரும் குற்றச் சாட்டு. இந்தப் பின்னணியில்தான் உச்சநீதிமன் றத்தின் கண்டனத்தை மோடி அரசு பெற்றுள்ளது. நீதிபதிகள் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப் படும் போதுதான் நீதி பரிபாலனத்தை விரை வாகச் செய்ய முடியும். அதற்கு மோடி அரசு முட்டுக் கட்டை போடுவது கண்டிக்கத்தக்கது.

;