headlines

img

உரை அல்ல உறை

தமிழக சட்டப் பேரவையின் இந்தாண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் திங்களன்று துவங்கியுள்ளது. இந்த உரை மாநில அதிமுக அரசின் நிலைபாடுகளை விளக்கும் உரையாக இல்லாமல் மத்திய பாஜக அரசு அடுத்தடுத்து நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை வழி மொழியும் உறையாகவே அமைந்துள்ளது.

உதாரணமாக ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்பது மோடி அரசின் திட்டமாகும். பொது விநி யோக முறை ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கருதப்படும். தமிழகத்தில் இந்த திட் டத்தால் பெரும் குளறுபடியும் இழப்பும் ஏற்படும். ஆனால் இந்தத் திட்டத்தை தமிழக அரசு நடை முறைப்படுத்தி வருவதாக ஆளுநர் உரை பெருமிதம் கொள்கிறது. இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தும் என ஆளுநர் உரை  கூறுகிறது. ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தை அதிமுக ஆதரித்த நிலையில், இலங்கை அகதிக ளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்காமல் ஆளுநர் உரையில் அளந்து விடுவது ஏன் என்ற கேள்வி எழுவது இயல்பே.

தமிழக மக்கள் எந்த ஒரு மதத்தையோ அல்லது சமய வழியையோ பின்பற்றினாலும் அனை வரின் நலனும் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும் என ஆளுநர் உரை கூறுகிறது. ஆனால் குடியுரிமை சட்டத் திருத்தத்தையும், குடிமக்கள் பதிவேட்டையும் நடைமுறைப்படுத்த மாட்டோம் என கேரளம் உட்பட பல்வேறு மாநி லங்கள் தெரிவித்துள்ள நிலையில் அத்தகைய ஒரு நிலையை தமிழகமும் எடுக்கும் என ஆளுநர் உரையில் கூறத் தயங்குவது ஏன்? கேரள சட்ட மன்றம் நிறைவேற்றியுள்ளது போல அரசியல் சாசனத்துக்கு விரோதமான இந்த சட்டத்திருத் தத்தை ஏற்க மாட்டோம் என தமிழக சட்டப் பேரவையும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாகும்.

தமிழகத்தில் வேலையின்மை கடுமையாக உயர்ந்துள்ளது. சிறு தொழிற்சாலைகள் மூடப்படு கின்றன. விவசாயம் கட்டுப்படியாகாத தொழிலாக மாறியுள்ளது. இதனால் இந்திய அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் தமிழ கத்தையும் கடுமையாக பாதிக்கும் நிலையில், இதனால் இன்னலுக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அறிவிப்பும் எதுவும் ஆளுநர் உரையில் இல்லை.

நிதி ஒதுக்கீடு, மானியம்  மற்றும் வரி பங்கீட்டில் தமிழகத்திற்கு மோடி அரசால் அநீதி இழைக்கப்படுவது குறித்து ஆளுநர் உரை பொரு முகிறது. ஆனால் இதை தட்டிக்கேட்க அதிமுக அரசு தயாராக இல்லை. மொத்தத்தில் மோடி அரசின் திட்டங்களுக்கு முட்டுக் கொடுக்கும் விதமாக ஆளுநர் உரை அமைந்துள்ளதே அன்றி தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதாக இல்லை. நழுவலும், மழுப்பலும் நிறைந்த சொற்கோவை யாக இந்த உரை அமைந்துள்ளதே தவிர தெளி வான பார்வை இல்லை. 

;