headlines

img

கதையளக்கும் அமைச்சர்

இந்தியாவில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரு கிறது. மத்திய மோடி அரசு என்னதான் சாக்கு போக்கு சொன்னாலும் களநிலவரம் மிகவும் கவலைக்கிடமாக மாறிநிற்கிறது. சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ் ஆய்வில்  கடந்த 3 மாதங்களாக இந்தியர்களின் முக்கிய கவலையே அதிகரித்து வரும் வேலையின்மை யாக இருக்கிறது என தெரிய வந்திருக்கிறது. ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண  உருப்படியான நட வடிக்கை எடுக்க தயாராக இல்லை. மாறாக நெருக்கடியை மூடி மறைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்.  ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சிக்கு ஓலா, உபேர் கார்கள்தான காரணம் என  பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார். பயணிகள் வாகன சரிவிற்கு ஓலா, உபேர்தான் காரணம் என்றால், லாரி, டிப்பர், டிரக்கர் உள்ளிட்ட மீடியம் மற்றும் கனரக வர்த்தக வாகன விற்பனை கடந்த மாதம் மட்டும் 54.3 சதவிகிதம் வீழ்ச்சி யடைந்திருக்கிறது. அதற்கு யார் காரணம்? 

முதன் முறையாக 75 தேசிய வழித்தடங்க ளில் போக்குவரத்து 30 சதவிகிதம் குறைந்தி ருக்கிறது. அனைவரும் ஓலா, உபேர் கார்களை பயன்படுத்தியிருந்தால் சாலையில்தானே சென்றிருக்க வேண்டும். பறந்தா சென்றார்கள்? இரு சக்கர வாகன விற்பனை 22.24 சதவிகி தம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்? இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் எல்லாம் தற்போது விமானத்தில் செல்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. 

உலகின் 4வது பெரும் வேலை வாய்ப்பு துறையாக இருந்து வரும் இந்திய ஆட்டோ மொபைல் துறையின் வீழ்ச்சியால் பல லட்சம் பேர் வேலையிழந்து வீதியில் நிற்கின்றனர். அதைப்பற்றி மத்திய அரசு சிறிதும் கவலை கொள்வதாக தெரியவில்லை. ஆட்டோ மொபைல் துறை மட்டுமின்றி  அனைத்து உற் பத்தி துறைகளும் கடும் வீழ்ச்சியையே சந்தித்து வருகிறது. ஜட்டி, பனியன், பிஸ்கட் கூட விற்பனை யாகவில்லை என புள்ளி விபரங்கள் தெரி விக்கின்றன. இங்கே பிரச்சனை மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து வாங்கும் சக்தியையும் இழந்திருக்கின்றனர் என்பதுதான்.  அதன் தாக்கம் தமிழகத்திலும் கடுமையாக இருக்கிறது.கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் ஏராளமான சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு அதன் உரி மையாளர்கள் கூலி தொழிலாளியாக மாறி யிருக்கின்றனர். 

லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி வீதியில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.  வட மாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்களும் வேலையின்றி மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பி செல்கின்றனர்.  ஆனால் இதைப்பற்றி யெல்லாம் மத்திய அரசோ, அதன் கூஜாவாக இருக்கும் தமிழக அரசு எந்த கவலையும் கொள்வதாக தெரியவில்லை.

;