இந்தாண்டு மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை நெகிழி இல்லாத நாடாக இந்தியா வை உருவாக்குவதற்கான நாளாக அனுசரிக்க வேண்டுமென்று கடந்த 24ஆம் தேதி சனிக் கிழமை பிரதமர் மோடி அறிவித்தார். நான்கு நாட்கள் கழித்து 29ஆம் தேதி ‘ஃபிட்இந்தியா’ இயக்கத்தை தொடங்கி வைத்து எல்லோரும் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்று உபதேசித் துள்ளார். இந்தாண்டு அக்டோபர் 2ஆம் தேதியன்று மகாத்மா காந்தியின் பிறந்ததினத்தை நாம் கொண்டாடும் போது திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லாத இந்தியாவை அவருக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்று மன் கீ பாத் (மனதின் குரல்) எனும் மாதாந்திர உரையில் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது சொந்த தொகுதியான வாரணாசி யில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலையை ஒழிப்பதற்காக கட்டித் தரப்பட்ட தனிநபர் கழிப்ப றைகள் பயன்படுத்தப்படாமல் கிடப்பதாக பிபிசி செய்தி நிறுவனம் ஆய்வு செய்து கட்டுரை ஒன்றை கடந்த தேர்தலுக்கு முன்பாக வெளி யிட்டிருந்ததை இப்போது நினைவு கூர்வதில் தவறில்லை. கழிப்பறைகளை கட்டிக் கொடுத்துவிட்டால் மட்டும் போதாது. அதற்கு தேவையான தண்ணீர் வசதி போன்றவையும் செய்து தர வேண்டும் என்பது அவரது தொகுதிவாழ் பெண்களின் கருத்தாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்தி ருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு நெகிழி இல்லாத இந்தியாவை உருவாக்குவதை சவாலாக ஏற்று செய்து முடிக்க காந்தியடிகளை விட வேறு என்ன உந்துசக்தி வேண்டுமென்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். காந்தியின் முக்கிய கொள்கை யான மத நல்லிணக்கத்தை, கிராமப்புற பொருளா தாரத்தை பாதுகாப்பதை செய்வதற்கு இவரது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை அவருக்கு நினைவுபடுத்துவது அவசியம்.
தற்போது ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கி வைத்து பேசும் போது சில நேரங்க ளில் 12 வயது முதல் 15 வயது சிறுவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதாகவும், 30 வயது உடை யவர்க்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் செய்தி களை கேட்கிறோம். இது கவலை தரும் விசய மாகும் என்று மிகவும் கவலைப்பட்டுள்ளார். ஆனால் இளம் வயதினருக்கும் கர்ப்பிணி பெண்க ளுக்கும் சத்துணவு பற்றாக்குறையால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்பதை வசதியாக மறந்துவிட்டார். இவரது கட்சியின் ஆட்சி நடக்கிற மாநிலங்களில் பெரும்பாலானவை இத்த கைய மோசமான நிலையிலேயே உள்ளன என்ப தை அவருக்கு நினைவூட்டுவது முக்கியமாகும். இந்நிலையிலேயே எல்லோரும் யோகா செய்யுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள் என்று ஏராளமாக அறிவுரைகளை சேவைத்திட்டங்க ளை ஒரு தொண்டு நிறுவனத்தின் தலைவர் போல் அறிவித்துக் கொண்டேயிருக்கிறார். ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் போல் அவற்றை அமல்படுத் துவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதை பற்றி அவர் கவலைப்பட்டாக வேண்டும்.