headlines

img

இடதுசாரிகள் மீண்டு வருவார்கள்

சர்வதேச நிதி மூலதனமும் இடதுசாரிகளின் அரசியல் செல்வாக்கை அழித்து ஒழிப்பதில் குறியாக இருக்கின்றன. தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள அவை பிற்போக்கு இந்துத்துவா சக்திகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் ஒழிந்துவிட்டன என்று நாட்டிலுள்ள பல பிரதான செய்தியேடுகள் தலையங்கங்கள் தீட்டியுள்ளன. ‘இடதுசாரிகள் காலம் முடிந்துவிட்டது’ அல்லது ‘இடதுசாரிகள் கரைந்துகொண்டிருக்கிறார்கள்’ என்று தீர்ப்பும் பகர்ந்திருக்கின்றன.மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் கடும் தோல்வி ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்துஇத்தகைய இரங்கல் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் ஓரிடம் கூடக் கிடைக்கவில்லை என்ற அடிப்படையிலும், கேரளாவில் ஓரிடம்மட்டுமே கிடைத்திருக்கிறது என்ற அடிப்படையிலும் இத்தகைய தீர்ப்புகளை இவை தங்கள் தலையங்கங்களில் கூறிக் கொண்டிருக்கின்றன.

பிழையான கணிப்புகள்

ணாம்சங்கள் என்ன? என்பவைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய அறிவு இல்லாததன் காரணமாகவே இத்தகைய தவறான கணிப்புகளுக்கு வந்து இவ்வாறு இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரிகளுக்கும் சமாதிகட்டப்பட்டுவிட்டது என எழுதிக் கொண்டிருக்கிறார்கள். 2019 மக்களவைத் தேர்தல் என்பது நாடாளுமன்ற வரலாற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் மிக மோசமான அளவில் தோல்வியைத் தந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இடதுசாரிகளின் எதிர்காலத்தை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே கணிப்பது பிழையானதாகும்.திரிபுரா தேர்தல் முடிவுகள் தில்லுமுல்லுகள் செய்து பெறப்பட்டுள்ள ஒன்றாகும். இடது முன்னணியின் உண்மையான வலுவினை அது பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. 2018சட்டமன்றத் தேர்தலுக்குப்பின்னர்,  அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின்னர், அம்மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஜனநாயகத்தை சூறையாடும் பாஜக- குண்டர் கும்பல்
 

கடந்த ஓராண்டு காலமாகவே இயல்பானஅரசியல் நடவடிக்கைகளுக்கே சாத்தியமில்லாமல் போய்விட்டன. இம்மாநிலத்தின் இரு மக்களவைத் தொகுதிகளில், மேற்குத் திரிபுரா தொகுதியில் மிகப் பெரிய அளவில் தேர்தல் மோசடிகளும், வாக்காளர்களை அச்சுறுத்தி மிரட்டிப்பணியவைத்திடும் முயற்சிகளும் நடைபெற்றன.தேர்தல் மோசடி எந்த அளவிற்கு மோசமாக இருந்தது என்றால், தேர்தல் ஆணையமே சுமார்பத்து சதவீத வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட வேண்டிய அளவிற்கு இருந்தன. உண்மையில் இதுவும்கூட பாதிப்புக்குஉள்ளான வாக்குச்சாவடிகளில் மிகவும் குறைவான அளவேயாகும்.  இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற்ற கிழக்குத் திரிபுரா தொகுதிக்கும்கூட தேர்தல் நடைபெறும் தேதி ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இத்தொகுதியிலும்கூட, சுமார் 400வாக்குச்சாவடிகள், வாக்காளர்கள் மிரட்டலுக்குஉள்ளாதல், வாக்குச்சாவடி முகவர்கள் விரட்டியடிக்கப்படுதல் மற்றும் பல்வகையான முறைகேடுகளால் பாதிப்புக்கு உள்ளாயின. தேர்தல் முடிந்தபின்னரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும்மற்றும் இடது முன்னணி ஊழியர்களுக்கும் எதிராக ஏவப்படும் வன்முறை வெறியாட்டங்கள் எந்த அளவிற்கு பாஜகவும் அதன் குண்டர் கும்பலும் திரிபுரா மாநிலத்தையும், ஜனநாயகத்தையும் சூறையாடிக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.  

213 பேரை பலி கொண்ட திரிணாமுல் வன்முறை
 

மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரசும் மம்தா பானர்ஜி அரசாங்கமும், தன்னுடைய குண்டர் படைகளின் மூலமாக கடந்த எட்டு ஆண்டுகாலமாக இடது முன்னணியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் நசுக்கிட வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.  இவர்களின் பாசிஸ்ட் பாணி தாக்குதலுக்கு இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் 213 உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் பலி கொடுத்திருக்கின்றன. கட்சி ஊழியர்களும் ஆதரவாளர்களும் அவர்களுடைய கிராமங்களிலிருந்தும், வீடுகளிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கான கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் அலுவலகங்களைக் கைப்பற்றிக்கொண்டுள்ளனர்.  ஆனால் இவற்றைப்பற்றியெல்லாம் கார்ப்பரேட் ஊடகங்கள் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளவில்லை. இத்தகைய சூழ்நிலையில்தான், ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் பாஜக இம்மாநிலத்திற்குள் நுழைவது சாத்தியமாகி இருக்கிறது. இடதுசாரிகள் மீதானதாக்குதல்கள் தொடரக்கூடிய அதே சமயத்தில்,ஆர்எஸ்எஸ்-உம் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளும் 2014க்குப்பின்னர் இம்மாநிலத்தில்சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. சங் பரிவாரங்களின் மதவெறிப் பிரச்சாரத்திற்கு திரிணாமுல் காங்கிரசும், மம்தா பானர்ஜியும் துணை போனார்கள்.  மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக வளர்ந்திருப்பதற்கும், தற்போதுதேர்தலில் பல இடங்களில் வெற்றி பெற்றிருப்பதற்கும் எவரையேனும் குறைகூற வேண்டும் என்றால் அது மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஜனநாயகத்தைப் படிப்படியாக நசுக்கிய அதன் குண்டர்படை அரசியலும்தான்.  

கவலையளிக்கும் விஷயம்
 

கடந்த மூன்றாண்டுகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும், மதவெறியர்களுக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் பல போராட்டங்களின் தலைமையில் எண்ணற்றப் பிரச்சாரங்களை மேற்கொண்டன. எனினும், தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடது முன்னணிக்கும் கிடைத்துள்ள வாக்கு சதவீதத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும். தேர்தல் முடிவுகள் குறித்து நுணுக்கமாக ஆய்வு செய்தபின், இவற்றைச் சரிசெய்வதற்குத் தேவையான அரசியல் மற்றும் ஸ்தாபனப் படிப்பினைகள் வரையப்படும்.  மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் இடதுசாரிகளையும் அதன் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்துத் தீர்மானித்திட முடியாது. இயக்கத்தைப் பாதுகாத்திட, அதன் முன்னணி ஊழியர்களையும், ஆதரவாளர்களையும் பாதுகாத்திட, அரச பயங்கரவாதத்தையும் அது கட்டவிழ்த்துவிடும் வன்முறை வெறியாட்டங்களையும் எதிர்த்திட மற்றும் வெகுஜனப் போராட்டங்கள் மற்றும் இயக்கங்களை மேற்கொள்ள தொடர் போராட்டங்கள் அவசியமாகும்.  

வித்தியாசமான வரலாறு
 

கேரளாவைப் பொறுத்தவரையிலும் அங்கே நடைபெறும் நாடாளுமன்றம் மற்றும்சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்களிக்கும் வரலாறு வித்தியாசமானதாகும். சட்டமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது மக்களவைத் தேர்தலில் அதிக அளவில் இடது ஜனநாயக முன்னணி தோல்வி கண்டிருக்கிறது. உண்மையில், 1977இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓரிடம் கூடக் கிடைக்கவில்லை. அப்போது வடக்கே காங்கிரஸ் கட்சி முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்ட அதேசமயத்தில் கேரளாவில் மட்டும் அமோக வெற்றி பெற்றது. எனினும், அதன்பின்னர் 1980இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதேபோன்று, 1984 மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரேயொரு இடம் மட்டுமே கிடைத்தது. ஆனால் அதன்பின்னர் 1987இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது இடது ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி பெற்றது.கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்இடது ஜனநாயக முன்னணியும் பெரிய அளவிலான வெகுஜனத் தளத்தையும், வலுவான ஊழியர் வலைப்பின்னலையும் மற்றும் சமூகப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றிடும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தை ஆதரித்திடும் மக்களின் ஆக்கப்பூர்வமான ஆதரவு தளத்தையும் பெற்றிருக்கின்றன. இத்தேர்தலின் அனுபவத்தில் பெற்ற படிப்பினைகளிலிருந்து, நம்மைவிட்டு விலகிச் சென்றுள்ள மக்களை மீண்டும் நம் பக்கத்திற்கு ஈர்த்திட, உடனடி நடவடிக்கைகளை கட்சி எடுத்திடும்.

முக்கியத்துவமான நாடாளுமன்ற பங்களிப்பு
 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் இதர இடதுசாரிக் கட்சிகளும் இந்தியாவில் தங்களுக்குப் பாதகமாகவுள்ள சூழலில் வேலை செய்து கொண்டிருக்கின்றன. ஆளும் வர்க்கங்களின் நவீன தாராளமய ஆட்சிகளும், சர்வதேச நிதி மூலதனமும் இடதுசாரிகளின் அரசியல் செல்வாக்கை அழித்து ஒழிப்பதில் குறியாக இருக்கின்றன.  தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள அவை பிற்போக்கு இந்துத்துவா சக்திகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன.  நவீன தாராளமயம் மற்றும் மதவெறி சக்திகளுக்கு எதிராக இடதுசாரிகள் தொடர்ந்து உறுதியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இடதுசாரிகளின் தலைமையில் இயங்கும் வெகுஜன அமைப்புகள் தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளை ஸ்தாபனரீதியாகத் திரட்டி போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் முன்னணியில் இருந்து வருகின்றன. இத்துடன் சேர்த்துத்தான் நாடாளுமன்றம் மூலமான பங்களிப்பினையும் இடதுசாரிகள் செய்து வந்தார்கள். அதற்கு இன்றையதினம் மிகுந்த முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது.  இடதுசாரிகள் மட்டும்தான், வலதுசாரி தாக்குதலுக்கு எதிரான போராட்டத்திற்கான தத்துவார்த்த ஆயுதங்களைப் பெற்றிருக்கிறார்கள்.ஒட்டுமொத்தமாக, மிகவும் மோசமானமுறையில் ஏற்பட்டுள்ள தேர்தல் பின்னடைவு குறித்து, அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக் குழுத் தலைமையால்  ஓர் ஆழமான சுயவிமர்சன ஆய்வு தேவைப்படுகிறது. இது மேற்கொள்ளப்படும். கட்சியின் அரசியல் மற்றும்ஸ்தாபனப் பணிகளை ஒரு குறிப்பிட்ட காலஅளவிற்குள் அமல்படுத்தக்கூடிய விதத்தில் கட்சியின் சுயேச்சையான பலத்தைக் கட்டி எழுப்பக்கூடிய விதத்தில் அது மறுசீரமைக்கப்படும்.

மே 29, 2019 
தமிழில் :  ச.வீரமணி

 

;