headlines

img

அதிகரிக்கும் இடைவெளி ஆபத்தின் அறிகுறி

இந்திய பொருளாதாரத்தின் மீதும், மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் மோடி அரசு தொடுத்து வரும் துல்லியத் தாக்குதலால் நாடு மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.மோடி அரசு எடுத்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை உண்மையாகி வருகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் ரூ.46 கோடி அளவுக்கு கள்ள நோட்டுக் கள் பிடிபட்டதாகவும் இவற்றில் 56 சதவீதம் மோடி அரசினால் வெளியிடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எனவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிடு வதே கள்ளப்பணத்தை ஒழிப்பதற்காகத்தான் என்று பீற்றிக் கொண்ட பிரதமர் மோடி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? கள்ளப்பண புழக்கத்தில் மோடி மற்றும் அமித்ஷாவின் மாநில மான குஜராத்தே முதலிடத்தில் இருக்கிறது என்ற தகவல் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்குமா என்று தெரியவில்லை. இதுதான் உண்மையான ‘குஜராத் மாடல்.’ மறுபுறத்தில் ஆக்ஸ்பாம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் அதிர்ச்சிய ளிப்பதாக உள்ளன. அம்பானி, அதானி போன்ற இந்தியாவின் ஒரு சதவீத பெரும் பணக்காரர்க ளின் சொத்து மதிப்பு 95.3 கோடி இந்திய மக்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பைவிட நான்கு மடங்கு அதிகம் என்று தெரிவித்துள்ள இந்த அமைப்பு, ஒரு சதவீத பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு என்பது இந்தியாவின் ஒட்டு மொத்த பட்ஜெட் தொகையை விட அதிகம் என்று கூறியுள்ளது. 

இந்தியாவில் சிறு பகுதியாக உள்ள பணக்கா ரர்களின் சொத்து மதிப்புக்கும் பெரும்பகுதி மக்களின் சொத்து மதிப்புக்கும் இடையேயான வேறுபாடு என்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. பட்ஜெட் துவங்கி மோடி அரசின் அனைத்து அறிவிப்புகளும் கார்ப்பரேட் முதலாளிகளை கொழுக்க வைப்பதாகவும், ஏழை மற்றும் நடுத்தர இந்திய மக்களின் வாழ்வை அதல பாதாளத்தில் தள்ளுவதாகவும் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்வைத்து வரும் குற்றச்சாட்டு எந்தளவுக்கு மெய்யானது என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மோடி அரசு ரூ.2.15 லட்சம் கோடி அளவுக்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச் சலுகையாக வும், கடன் தள்ளுபடியாகவும், மானியமாகவும் வாரி வழங்கியுள்ளது. மறுபுறத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக திட்டமிட்டு அழிக் கப்படுகின்றன.  இந்த நிலை நீடிக்குமானால் மீள முடியாத நெருக்கடியில் இந்தியப் பொருளாதாரத்தை மோடி அரசு சிக்க வைத்துவிடும். மக்களின் ஒன்று பட்ட போராட்டத்தின் மூலமாக மட்டுமே இந்த அரசுக்கு பாடம் கற்பிக்க முடியும். மோடி அரசு இந்திய மக்களுக்கானது அல்ல என்பது தெளி வாக நிரூபணமாகியுள்ள நிலையில் தேசபக்தர் கள் ஒன்றுபட்டு களமிறங்க வேண்டிய நேரம் இது.

;