headlines

img

இந்தி திணிப்பு மட்டுமல்ல - இவரே ஒரு திணிப்புதான்

 மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவர் களுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பில் அந்த அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் கோட்சே இந்தியிலேயே உரையாற்றியுள்ளார். மொத்த பயிற்சி வகுப்பும் இந்தி மொழியில் மட்டுமே நடந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட இந்தி தெரியாத மாநில மருத்துவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ராஜேஷ் கோட்சே ‘இந்தி தெரிய வில்லை என்றால் வகுப்பிலிருந்து வெளி யேறுங்கள்’ என்று ஆணவமாக கூறியதற்கு தமிழக கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன.  சென்னை விமான நிலையத்தில் திமுக நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழியைப் பார்த்து மத்திய பாதுகாப்பு படை போலீஸ் ஒருவர் ‘இந்தி தெரிய வில்லை என்றால் நீங்கள் இந்தியரா?’ என்று கேட்டது பெரும் சர்ச்சையையும், கண்டனத்தையும் சந்தித்த நிலையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.  மத்தியில் உள்ள மோடி அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியை வம்படியாக திணிக்க முயலும் பின்னணியில் இந்த சம்பவங்கள் நடந்து வருகின்றன.

ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளராக ராஜேஷ் கோட்சே நியமிக்கப்பட்ட போதே பெரும்  சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் அவருக்கு மேலும் இரண்டாண்டுகள் பணிநீட்டிப்பு தரப்பட்டி ருக்கிறது. பொதுவாக மத்திய அமைச்சகத்தின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளே நியமிக்கப்படுவர். ஆனால் ஐஏஎஸ் அதிகாரி அல்லாதவரான ராஜேஷ் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.  இதற்கு முக்கிய காரணம் இவர் நெடுங்கால மாக ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடை யவர் என்பதுதான். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர். ஆயுர்வேத மருத்துவரான இவரது வர்த்தக நிறுவனத்தை 2015ஆம் ஆண்டு மோடிதான் துவக்கி வைத்துள்ளார்.  ஆயுர்வேத மருத்துவரான கோட்சேயின் மனைவி ஆயுர்வேத நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். எனினும் ஆயுஷ் அமைச்சகம் நடத்தும் பயிற்சி நிலையத்தில் இவர் பணியமர்த்தப்பட்டதும் சர்ச்சைக்குள்ளானது.  

இவ்வாறு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய இவர் தற்போது தன்னுடைய இந்தி திணிப்பின் மூலம் பலத்த கண்டனத்தை எதிர்கொண்டுள்ளார். வகுப்பில் இடையூறு செய்தவர்களைத்தான் வெளியேறுமாறு கூறியதாக இவர் கூறும் காரணம் ஏற்கத்தக்கதல்ல. யோகா மற்றும் இயற்கை மருத்துவம் எந்த வொரு மொழிக்கும் மட்டும் சொந்தமானதல்ல, இந்திய அளவிலான பயிற்சி வகுப்பை ஒரு  மொழியில் மட்டும் நடத்துவது என்பது அப்பட்ட மான வெறித்தனமேயன்றி வேறல்ல. மோடியின் நண்பர் என்பதற்காகவே ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்ட இவர் அந்தப் பொறுப்பில் நீடிக்கும் அருகதையற்றவர். இவரைப் போன்றவர்களின் போக்கினால் இந்திய ஒருமைப் பாடும் கூட்டாட்சித் தத்துவமும், மொழிகளின் சமத் துவமும் சிதைக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது.

;