headlines

img

வரதட்சணை ஒழியுமா?

நாட்டிலிருந்து வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க சட்டத்தில் இன்னும் கடுமையான விதி முறைகளை கொண்டு வர வேண்டும் என்றும் தவிர மக்களும் மனதளவில் மாற வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழக்கொன்றின் தீர்ப்பில் கூறியுள்ளார். அத்துடன் திருமணத்தின் அடிப்படை சமூக மதிப்பு குறித்த புரிதல் ஏற்பட வேண்டும் என்றும் இந்த விஷ யத்தில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பது குறித்து மனுதாரர்கள் தங்களது ஆய்வு களை நீதிமன்றத்தில் சமர்பிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

வரதட்சணையின் மூலம் எது? அது ஏன் பெண்ணோடு மட்டும் பொருத்தப்பட்டது? ஆணுக்கு அவ்வாறு இல்லையே, அது ஏன்? பெண் மட்டும்தானே புகுந்த வீடு செல்கிறாள்; ஆண் அவனது வீட்டிலேயே தானே இருக்கிறான். இதன்  காரணம் என்ன? இதன் சமூக, பொருளாதார, அரசியல் பின்னணி என்ன?

மனித குல வரலாற்றில் பெண் தலைவியாக இருந்த துவக்க காலம் மாறிய பின்னர் ஆண் தலைமையிலான ஆணாதிக்க சமூகமாக ஆன போது குடும்பம், தனிச்சொத்து தோன்றிய பிறகு பெண் அடிமைப்படுத்தப்பட்ட பிறகு நிலப்  பிரபுத்துவ சமூகத்தின் பண்பாட்டுப் பழக்கமாக ஏற்பட்டதே வரதட்சணை.

பெற்றோரின் சொத்தில் பெண்ணுக்கு பங்கு இல்லாத காலத்தில் அவருக்காக கொஞ்சம் நகை நட்டு, சீர் செனத்தி என கொடுக்கப்பட்டது. பின்னர் சமூகத்தின் எழுதப்படாத சட்டமாகியது. இதனால் பெண்ணுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது. அதற்கு பெண் பிள்ளைக்கு வர தட்சணை கொடுப்பதையே காரணமாகக் கூறப் பட்டது.

இந்த நிலை இந்தியாவில் மநுதர்மம் எனப்படும் சமூக அநீதியான, மநு அநீதியால் கடுமையா னது; கொடுமையானது. பெண்ணுக்கு கல்வி மறுக் கப்பட்டது. சொத்துரிமை பற்றி நினைக்கவே முடியாமல் போனது. இதற்கு எதிரான சமத்துவக் குரல்கள் சமூகத்தில் ஒலிக்கவே செய்தன. மண்ண டிமை தீருமட்டும் பேசுமித் திருநாட்டில் பெண்ண டிமை தீருதல் முயற்கொம்பே என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

ஆணும், பெண்ணும் சமம் என்கிற சமத்துவ உணர்வு நடைமுறைச் சட்டமானது, புரட்சியில் பூத்த பொதுவுடமை ஆட்சியால் ரஷ்ய நாட்டில் சாத்தியமானது. தமிழ்நாட்டிலும் கலைஞர் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை  சட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டியது கட்டாயம். அத்துடன் கல்வி, வேலை, குடும்ப வாழ்க்கையில் பெண் சம பங்காளி என்ற நிலையே வரதட்சணையை ஒழிக்கும். அதல்லா மல் எத்தனை எத்தனை சட்டங்கள் கடுமையாக வந்தாலும் அது ஒழியாது. மக்கள் மனதளவில் மாற மநு அநீதிக் கூட்டமும் விடாது.

;