headlines

img

குரூரமான கோமாளித்தனம் 

 இந்திய கல்வித்துறையை சீரழிக்கும் பல்வேறு ஆலோசனைகள் அடங்கிய தேசிய கல்விக்கொள்கை வரைவு - 2019 என்ற ஆவ ணத்தை மத்திய அரசு வெளியிட்டது. அதன் மீது பொதுமக்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த வரைவுக்கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவோ, நடைமுறைக்கு வந்துவிட்டதாகவோ மத்திய அரசு இன்னமும் அறிவிக்கவில்லை. கஸ்தூரிரங்கன் தலைமையிலான இந்தக் குழுவின் பரிந்துரைகளில் அரசு ஏற்றுக்கொண்ட வை எவை, நிராகரித்தவை எவை என்று எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் தமிழ கத்தில் இந்த வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள விபரீதமான பரிந்துரைகள் ஒவ்வொன் றாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.  மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி யாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத் தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. தமிழக கல்வித்துறையை முற்றாக அழிக்கும் பல ஆபத்தான யோசனைகள் ஒவ் வொன்றாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கல்வித்துறையை மாநில அரசிடமிருந்து முற்றாக பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட அதிமுக ஆட்சியாளர்கள் கூற வில்லை. மாறாக கொஞ்சம்கூட வெட்கமில்லா மல் மோடி அரசு கூறுவதற்கெல்லாம் தலையாட்டி பொம்மைபோல இசைவு தெரிவித்து வரு கின்றனர். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்று பள்ளிக்கல்வித்துறை அறி வித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழவே மத்திய அரசின் ஒப்புதலோடு இந்த திட்டம் மூன்றாண்டு களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி யுள்ளார். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழித் தேர்வுகள் இரண்டாக இருந்ததை ஒன்றாக சுருக்கி விட்ட னர். இதனுடைய பாதகம் குறித்து சொல்லப்பட்ட கருத்துக்களை செவி மடுக்கவில்லை.  சிறுபான்மையோர் நடத்தும் கல்வி நிறுவ னங்களை சிதைக்கும் வகையில் ஆசிரியர் நிய மனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக ளின் எண்ணிக்கையை கணிசமாக குறைப்பது, ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன.  இந்தநிலையில் தனியார் தொண்டு நிறுவ னங்களும் அரசுப் பள்ளிகளில் பாடம் நடத்த லாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது உச்சக்கட்ட  கொடுமையாகும். ஆர்எஸ்எஸ் போன்ற மதவெறி அமைப்புகளை பள்ளியில் நுழைய வைக்க மோடி கொண்டு வந்த திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவது ஆபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதாகும். பள்ளிக் கல்வித்துறையில் குரூரமான கோமாளித் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை யென்றால் கல்வித்துறையை காப்பாற்ற முடியாது.

;