headlines

img

கொக்குகள் கண் சிமிட்டுகின்றன! - வரத.ராஜமாணிக்கம்

மலர்கள் நிறைந்து கிடந்த பூங்காவில் சற்று முன்னர் பெய்த மழை குளிர்ச்சியை கொண்டு வந்திருந்தது. நடுவே விரிந்து விண்ணை நோக்கி பரந்தி ருந்த ஆலமரத்திலிருந்து ஒரு  ஆண் அணில் சரசரவென  தரையிறங்கியது. அருகில் பெரி தாய் மலர்ந்திருந்த மஞ்சள் ரோஜாவை பறித்துச் செல்ல ஆசைப்பட்டது. ஆனால் ஒரு  இதழை மட்டுமே அதனால்  கவ்விச் செல்ல முடிந்தது. மலரி தழுடன் மரமேறிச் சென்ற  அணிலின் வரவுக்காக பெண் அணில் காத்திருந்தது. பெண் அணிலிடம் அணுக்கமாக அமர்ந்த ஆண் அணில்,  இதழை இரு முன் கைகளால் துடைத்து பவித்ரமாக கொடுத் தது. பெண் அணில் வாங்க மறுத்து திரும்பிக்கொண்டது. “நான் கேட்டது இதழல்ல, மலர்” என வீம்பு செய்தது, அருகி லிருந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்த வெள்ளை நிறக் கொக்கு, “அதற்கென்ன நான் பறித்துத் தருகிறேன்” என்றது.  ஆண் அணில் எச்சரிக்கையுடன் “வேண்டாம்” என்றது. ஆனால்  பெண் அணிலோ அதன் வெள்ளையை நம்பி சம்மதம் தெரி வித்தது. அடுத்த நிமிடம் மஞ்சள் ரோஜாவுடன் கொக்கு பறந்து  வந்தது. அதைப் பெற்றுக் கொள்ள ஆசையாய் பெண் அணில்  கைகளை நீட்டியது. ஆனால் கொக்கோ, “என் முதுகில் சிறிது நேரம் சவாரி செய்தால் மட்டுமே, ரோஜாவைத் தர முடி யும்” என நிபந்தனை விதித்தது. நிலைமை கை மீறிப் போகி றது என உணர்ந்து ஆண் அணில் பெண் அணிலைத் தடுத்தது.  ஆனால் பெண் அணில் தயக்கமின்றி கொக்கின் முதுகில்  ஏறி அமர்ந்த கொண்டது. கொக்கு ஜிவ்வென வானில் பறக்க ஆரம்பித்தது பெண்  அணிலுக்கு நிலை கொள்ளா சந்தோசம். கொக்கு கவ்வி யிருந்த ரோஜாவை, கொடுக்க முடியுமா? என அணில் கேட்டது.  கொக்கு “அதற்கென்ன எடுத்துக்கொள்” என ரோஜாவைக் கவ்வியிருந்த வாயைத் திறந்தது. ரோஜா மண்ணை நோக்கி  இறங்கியது. பெண் அணில், “அய்யய்யோ ரோஜா போச்சே”  என அலறியது “அதனாலென்ன அதன் பின்னால் போய் எடுத்துக் கொள்” என கொக்கு சிறகுகளை ஒரு பக்கம் சாய்த்த தில், பெண் அணில் ஆ.. வென்று கீழே விழுந்தது. அதன் உயிர்  பிரிந்தது. இறந்த பெண் அணிலின் ருசியான உடல் பாகங்களை  கொத்திச் சுவைத்த கொக்கு, “பெண் அணில் ரோஜா மல ருக்கு ஏன் ஆசைப்பட்டது” என சிந்திக்கவும் செய்தது.  ஆண் அணில் பெண் அணிலின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தது. மாலையில் கூடு அடைந்த கொக்கிடம் ஆண் அணில் பெண் அணிலைப் பற்றி விசாரித்தது. ‘‘பெண் அணில் மலரு டன் சேர்ந்து இறைவனைச் சரணடைந்து விட்டது” என கூசா மல் பொய் சொன்னது. பிறகு கண்களைச் சிமிட்டியவாறே “உனக்கும் மலர் வேண்டுமா?” எனக் கேட்டது.

;