headlines

img

கிளிக்கண்ணிகள்

(தாயைக் கொல்லும் பஞ்சத்தை
தடுக்க முயற்சியுறார்
வாயைத் திறந்து சும்மா - கிளியே
வந்தே மாதரம் என்பார்.--- பாரதி)

மதவெறி சாதிவெறி
மண்டிய பாழ் நிலமாம்
சதுப்பென தேசமடீ- கிளியே
சகுனிகள் ஆட்சியடீ
(மதவெறி)

தேசமோ தேசம் என்றே
சிந்திப்பார் போல் நடிப்பார்.
பாசமோ பாசம் என்பார் - கிளியே
பாசாங்கு செய்வாரடீ
(மதவெறி)
சாதியை மதவெறியை
சாத்திரக் குப்பைகளை
வேதியர் வளர்த்தாரடீ- கிளியே
நீதியைச் சிதைத்தாரடீ
(மதவெறி)
அந்தமும் ஆதி இலான்
ஆண்டவன் பிறந்த இடம்
இந்த இடம் தான் எனல்- கிளியே
ஏமாற்று வித்தையடீ.
(மதவெறி)
உன்மதம் என்மதமாம் 
உன்மத்தம் கொண்டலைவார்
சம்மதம் சொல்வாரடீ- கிளியே
சனக்கொலை புரிவதற்கே.
(மதவெறி)
நாரணன் பேரைச் சொல்லி
நரபலி கொள்பவர்க்கு
பூரண மரியாதை - கிளியே
பொய்மையே இவர் பாதை.
(மதவெறி)
செருப்புக்கு வரலாமோ
சிம்மாசன ஆசை?
பொறுப்புக்குத் தகுதி இல்லை - கிளியே
போகட்டும் இவர்கள் தொல்லை.
(மதவெறி)

;