headlines

img

‘தோல்’ நாவல் சமூக மாற்றத்தின் ஒரு வர்க்கப் போர்வாள் - முனைவர் க.கணேசன்

ஒரு குறிப்பிட்ட விஷயம்குறித்து நூறு கட்டுரைகள் எழுதுவதைவிட கதாபாத் திரங்களின் மூலம் காட்சிப்படுத்துவதே வாசகர் மனதில் எளிதில்      கலப்பது மட்டு மல்ல, அவை மனதில் அசைபோட்டு  உலுக்கி, சிந்தனை மாற்றத்தை எளிதில் உருவாக்குகின்றன. இது ஏராளமான படைப்புகளுக்குப் பொருந்துமென்றாலு ங்கூட ‘தோல்’ நாவலுக்கு மிகப் பொருந்தும் என்பதே உண்மை.    தமிழ்கூறும் நல்லுலகில் மூத்த படைப்பாளி டி.செல்வராஜ் நெல்லை மாவட்டத்தில் பிறந்து திண்டுக்கல்லில் வசித்து வழக்கறிஞர் தொழிலோடு எழுத்தையும் அரவணைத்துக்கொண்டு படைப்புலகத்தில் உயர்ந்து நின்றார். அந்த முதுபெரும் எழுத்தாளரை இயற்கை தனதாக்கிக் கொண்டாலும்  படைப்புகள் மூலம் என்றென்றும்  வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் டி.செல்வராஜ். ‘மலரும் சருகும்’, ‘தேநீர்’, ‘அக்னிக்குண்டம்’, ‘மூல தனம்’, ‘நோன்பு’ போன்ற நாவல்களை யும், ‘யுகசங்கம்’, ‘பாட்டு முடியும் முன்னே’, ‘வேட்டை’ ஆகிய நாடகங்களையும் எழுத்துலகிற்கு அளித்துள்ளார்.  மலரும் சருகும் நாவல் காந்திகிராம பல்கலைக் கழகத்திலும் நோன்பு சிறு கதை தொகுப்பு மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழகத்திலும் பாடத்தி ட்டத்தில் இடம் பெற்றுள்ளவை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மூலவர்களில் ஒருவர். செம்மலர்,  தாமரை ஆகிய மாத ஏடுகளில் இவரது பல படைப்புகள் வெளி வந்துள்ளன. பொதுவுடமை இயக்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்தி அர்ப்பணித்த தோழர் ஜீவானந்தம் வாழ்க்கை வர லாற்றை சாகித்ய அகாடமிக்காக எழுதிய இவரது  ‘தோல்’ நாவல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றிருப்பது  எழுத்தாளரின் ஆளுமைக்கு மட்டுமல்ல நாவலில் உலா வருகின்ற உண்மை தொழிற்சங்க தியாகி களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியே! சாகித்ய அகாடமி விருது கிடைக்கும்  முன்பே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், தமிழக அரசும் சிறந்த நாவலுக்கான விருது வழங்கி கவுரவித்த 695 பக்கங்களாக விரிந்திருக்கும் இந்நாவலை  இளவயதில் நானும் என் சமூகமும் அனுபவித்தவற்றையும், இது நாள்வரை திண்டுக்கல் மாவட்டத்தில் உற்று நோக்கிக்கொண்டிருக்கிற அவலங்களை யும் நினைத்துக்கொண்டே வாசித்தபோது கண்ணீரும் கம்பீரமான உணர்வு நிலையும் இருந்தது  நாவலை முடிக்கும்வரை. 1930 முதல் 1950 வரை திண்டுக்கல் நகரத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலை யில் பணிபுரிந்த அடிமைகளைச் சூழ்ந்தி ருந்த அவலங்களிலிருந்து விடுதலை யாக்கி உத்வேகப்படுத்தி தலித் மக்க ளுக்கு தன்னம்பிக்கைகளையும், தைரியத்தையும் ஊட்டி சுயமரியாதை உணர்வை ஏற்படுத்திய  தொழிற்சங்க தோழர்களின் வரலாறே  ‘தோல்’ நாவல். இது உள்ளூர் வரலாற்றோடு தேசிய வர லாற்றையும் இணைத்திருக்கிறது. உயி ரோடு உலாவிய மனித தியாகிகளை கதாபாத்திரங்களாக சித்தரிக்கிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் தொழிலாளர் தங்கள் இன்னல்க ளிலிருந்து வெளிவருவதற்கு நடத்திய போராட்டங்கள்,அதன் பின்னணிகள், மக்கள் போராட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களோடு தங்களை இணைத்துக் கொண்ட பண்பு,  முதலாளிகளின் கைக்கூலி களாக போலீஸ் செயல்பட்டு நடத்திய அடக்குமுறைகள் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடைசெய்யப்பட்டபோது போலீசின் கண்ணில் மண்ணைத் தூவி அடித்தட்டு மக்கள் மத்தியிலேயே தோழர்கள்  தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு சங்க நடவடிக்கை களுக்கு வழிகாட்டிய தன்மை  உள்ளிட்ட வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பாக இந்நாவல் உள்ளது. ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை ஒடுக்கப்பட்டோர்தான் தீர்மானிக்கமுடி யும் என்று நிலவிவரும் கருத்தோட்ட த்தை மறுதலித்து வர்க்க ஒற்றுமை சமூகப்போராட்டத்தில் கால்பதிக்கும் போது இது சாத்தியமாகும் என்பதற்கு சாட்சியாக அமைகிறது இந்நாவல்.தோல் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாம், இந்து மக்களில் வறுமைக்குட்பட்ட மக்கள்தான். முதலாளிகளின் சுரண்டலுக்கும்,மோசப்படுத்துதலுக்கும் எதிராக உருவாக்கிய சங்கத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்கள். தொழிற்சங்கத்தில் அனைத்து சாதியிலும் ஒடுக்குதலை எதிர்ப்போர் இருந்தமையால்  வர்க்கப் போராட்டம் மூலமாக ஒரு நிமிர்தல் கிடைக்கிறது. வெளிநாட்டில் வழக்கறிஞர் படிப்பு முடித்த பழமையை மறுத்த காங்கிரஸ் சோசலிஸ்ட எண்ணங்கொண்ட பிராமண குடும்பத்தில் பிறந்த சங்கரன் சனாதன முறையை கைவிட்டு, தொழிற்சங்க வாதியாகி, பூணூலைக் கழட்டிவிட்டு கம்யூ னிஸ்ட் கட்சி தோழர்களின் ஒடுக்கப்பட்ட மக்களோடு பழகும் அணுகுமுறைகளை யும் அவர்கள் வீடுகளில் மாட்டிறைச்சி, மரச்சீனி கிழங்கு ஆகியவற்றை சாப்பிட்டு அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற விதங்களைப் பார்த்து தொழிற்சங்கத்தி ற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உழைக்கும்மக்களுக்கும் அர்ப்பணிக்கும் தன்மை பிரமிக்க வைக்கிறது. சாதியத்தை உடைத்து தாசி குலத்தில் பிறந்த பெண்ணை நேசித்து பல முறை போராட்டங்களுக்காக சிறையேகியும் தலைமறைவு வாழ்வு மேற்கொண்டும் சங்கத்திற்கு வழிகாட்டி வந்த சங்கரன், காதலித்த பெண்ணை கைவிடக்கூடாது என நினைத்து தனது பெற்றோர் தனது  செயல்பாட்டுக்கு எவ்வித தடையேதும் செய்யவில்லை.திருமணம் நடக்கும்போது இவரைக் கைது செய்யக் காத்துக் கொண்டி ருந்த காவல்துறை உளவாளிகள் திருமணம் முடிந்தவுடன் கைது செய்து அழைத்துதச் செல்கிறது. இந்த தியாக வரலாறு பதிவு செய்த தன்மை வரும் தலை முறைக்கு சாதீயம் குறித்து சிந்திக்க தூண்டும். நாவலின் கதாபாத்திரங்கள் அனைத்தும் சில பெயர்கள் மாறியிருந்தா லும் உண்மையில் வாழ்ந்து வழிகாட்டிய வர்கள்தான்.குறிப்பாக கணேச அய்யர் நகர்மன்ற தலைவர்தான். தோழர்கள் ஏ.பாலசுப்ரமணியன்(சங்கரன்) எஸ் ஏ.தங்கராஜ்(பிரதர் தங்கசாமி) இவர் பின்னாளில் மார்க்ஸிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் பொதுத் தொகுதியில் எம் எல் ஏ வாக வெற்றிபெற்ற தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். எரியோடு மதனகோபால், சார்லஸ்,இவர் டிசம்பர்2012ல் தான் இறந்தார்.  உண்மை மனிதர்கள் காதா பாத்திரங்களாக உலாவரும் தோல் நாவலை நாமனைவரும் படித்து நெஞ்சி லேற்றி பரப்புவது தோழர் செல்வராஜுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி யாகும். 

;