headlines

img

கிராமங்களை நோக்கியும் கொஞ்சம் சிந்திப்போம்...-ஐவி.நாகராஜன்

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளின்படி பத்தாயிரம் நபர்க ளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் என மருத்துவம் தொடர்பு டைய 23 நபர்கள் பணியில் இருக்க வேண்டும்.இது குறைந்தபட்ச  அளவு மட்டுமே. ஆனால், இந்தியாவில் இந்த விகிதாச்சாரம் மிக மோச மான நிலையில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பு  முடிந்து வெளியேவரும் மருத்துவர்களில் ஐம்பது சதவீதத்தினர் அரசு  மருத்துவக் கல்லூரிகளில் பயின்றவர்கள். அரசு கல்லூரிகளில் பயில்ப வர்கள் குறைந்தது ஒரு ஆண்டுகாலம் கிராமப்புறங்களில் பணியாற்ற  வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது. ஆனால் இந்தக் காலகட்டத்தை பெரும்பாலானோர் சபிக்கப்பட்ட  ஒன்றாகவே கருதுகின்றனர். இவர்கள் மட்டுமல்ல, கிராமங்களில்  உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களும்  கூட வேறுவழியின்றி நிர்ப்பந்தத்தின் காரணமாக பணிபுரியும் மனநிலை யில்தான் இருக்கின்றனர். இதற்கு இரண்டு காரணங் கள் உள்ளன. ஒன்று அரசு சம்  பந்தப்பட்டது. மற்றொன்று சமூ கம் சார்ந்தது. முக்கியமான அடிப்  படை வசதிகளைக்கூட அரசு  செய்து தருவதில்லை என்பது ஒரு புகாராக உள்ளது. அதே சமயம், அவர்கள் எதிர்பார்க்  கும் வாழ்க்கைமுறை வசதிகள்  கிராமப்புறங்களில் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது மற்றொரு காரணமாக உள்ளது.  அதனால் இந்த ஒரு ஆண்டுகால கட்டாய பணி முடிந்ததும் இவர்க ளில் 80 சதவித மருத்துவர்கள் நகர்ப்புறங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர்.

அரசு மருத்துவராக இருப்பதைக் காட்டிலும் தனியார் மருத்துவ மனையில் அதிக ஊதியம் ஈட்ட முடியும் என்ற காரணத்தினாலும்  நகர்ப்புற வாழ்க்கையின் மீதான விருப்பதினாலும் தனியார் நிறு வனங்களில் பணி புரிய விரும்புகின்றனர். இவ்வாறு பொரும்பாலானேர்  நகர்ப்புறங்களை நோக்கி நகர்வதால் கிராமப்புறங்கள் முற்றிலும்  கைவிடப்படுகின்றன. நகரங்களில் தேவைக்கும் அதிகமான  அளவு மருத்துவர்களின் எண்ணிக்கை பெருகிவிடுகிறது. இதனால் நகரம் மற்றும் கிராமங்களுக்கு இடையே முறையற்ற மருத்துவர் விகிதாச்சாரம் உருவாகி விடுகிறது. இதன் விளைவு கிராமப்புறங்க ளில் முறையான கல்வித் தகுதியில்லாத அனுபவமில்லாத நபர்கள்  மருத்துவம் பார்க்கும் நிலையும் உண்டாகிறது. முதலில் அரசு மருத்துவமனைகளின் மீதான மக்களின்  எண்ணத்தை மாற்ற வேண்டும். அரசு கிராமப்புறங்களில் மருத்து வர்களை நியமிப்பதோடு மட்டுமல்லாமல் தேவையான வசதிகளையும் செய்துதர வேண்டும். தொடர்ந்து மருத்துவமனைகளின் நிர்வாகமும் செயல்பாடுகளும் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.  அப்போதுதான் கிராமங்களில் இருக்கும் மக்களுக்கும் மருத்து வம் என்பது சரியான முறையில் வழங்கப்படும். இனி அரசு, நக ரங்களுக்கு மட்டுமல்ல  கிராமங்களையும் நோக்கி சிந்திக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான மருத்துவ வசதிகளை  கிராமப்புற மக்களுக்கும் முழுமையாக வழங்கமுடியும்.

;