headlines

img

பொய் நெல் பொங்கலாகுமா?

பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்கும் கதையாக, தனக்கு தானே விளம்பரம் செய்து கொண்டு அதனையே வளர்ச்சி என பேசி மக்களைமுட்டாளாக்க முனைகிறார் பிரதமர் மோடி.

கடந்த 2019-20 ஆம் ஆண்டில் மட்டும் பாஜகதலைமையிலான மோடி அரசு  விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து ரூ.713.20 கோடியை செலவு செய்திருக்கிறது. அதாவது, நாள் ஒன்றிக்கு சராசரியாக ரூ.1.95 கோடியை விளம்ப
ரங்களுக்காக செலவழித்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு அரசு பதிலளித்திருக்கிறது. அதே நேரத்தில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு செய்தசெலவு குறித்து எந்தவொரு தகவலும் அளிக்கமறுத்திருக்கிறது. இதையும் கணக்கில் கொண்டால் இந்தாண்டில் மட்டும் ரூ.ஆயிரம் கோடி வரை மோடி அரசு விளம்பத்திற்காக செலவிடப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

ஆனால் சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியலில் நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைவிட பின்தங்கி இந்தியா94 வது இடத்தில் இருக்கிறது. இதிலிருந்து மோடிபேசி வரும் வளர்ச்சி விளம்பரங்களில் மட்டுமேஇருப்பதை புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, 2014ல் ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தை பிரதமர் மோடி மிக  பிரம்மாண்டமான விளம்பரத்தோடு அறிவித்தார். ஸ்வச் பாரத் அபியான் திட்டத்திற்கு 2019 மார்ச் மாதம் வரை49,218 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 30 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலம் என்றும் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தலைமை கணக்கு தணிக்கை துறை 2017 செப்டம்பர் முதல் ஜனவரி 2018 வரை நடத்திய ஆய்வில் கட்டப்பட்டதாக கூறப்ப
ட்ட11 சதவிகித கழிவறைகள் கோப்புகளில் மட்டுமே தான் உள்ளது. ஆனால் பள்ளிகளில் காணவில்லை. மேலும் 30சதவிகித கழிவறைகள் முறையாக சுத்தம் செய்யப்படாமலும் தண்ணீர் வசதி இல்லாமலும் சிதிலமடைந்து கிடக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு உண்மைகளை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியது.

 பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கல்விவிழிப்புணர்வுக்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகையை விட 15 மடங்கு அதிகமாக ஸ்வச்பாரத் அபியான் திட்ட விளம்பரத்திற்கு பயன்படுத்தியது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இதுதான் மோடி அரசின் வளர்ச்சி திட்டங்களின் லட்சணம். மோடி அரசு பதவியேற்ற பின்னர் மட்டும் விளம்பரத்திற்காக வாரி இறைக்கப்பட்ட பணம்சுமார் ரூ.6 ஆயிரம் கோடியாகும். அதேநேரம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் மொத்தமாக விளம்பரத்திற்காக செலவழிக்கப்பட்ட தொகை ரூ.2,658 கோடி மட்டுமே. ஊடகங்களை விளம்பரத்தின் மூலம் விலைக்கு வாங்கலாம். ஆனால் நாட்டின் எதார்த்த நிலையை மோடி ஒரு போதும் திரைபோட்டு மூடிட முடியாது. 2004 ஆம் ஆண்டு“இந்தியா ஒளிர்கிறது” என்ற பிம்பத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட அந்த பிரச்சாரமே,அன்று அந்த ஆட்சிக்கு முடிவு கட்டியது.இந்த வரலாற்றை மீண்டும் ஒருமுறை காலம் எழுதும்.
 

;