headlines

img

ஒற்றுமை நீங்கிடில்...

நேபாளத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து, வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 275 இடங்க ளில் 165 உறுப்பினர்கள் நேரடியாகவும், 110 பேர் கட்சி கள் பெறும் வாக்குகளைக் கணக்கில் கொண்டு  விகிதாச்சார முறைப்படியும் தேர்வு செய்யப்படு வார்கள். நேரடியாகத் தேர்வு செய்யப்படும் தொகு திகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. விகிதாச்சாரப்படி வழஙக வேண்டிய இடங்களுக்கான வாக்குகளில் இன்னும் பாதி எண்ண வேண்டியிருக்கிறது.

இதுவரை வெளியான முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, நேபாள காங்கிரஸ் தலைமையி லான ஆளும் கூட்டணி மீண்டும் ஆட்சியில் அம ரப் போகிறது. இந்தக் கூட்டணியில் நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி(மாவோயிஸ்டு மையம்), நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(ஒன்றுபட்ட சோசலிஸ்டு) மற்றும் ராஷ்டிர பிரஜாதந்திர கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் இணைந்து பெறும் இடங்கள் பெரும்பான்மையைத் தாண்டி விடும். மாவோயிஸ்டு மையமும், ஒன்றுபட்ட சோச லிஸ்டு கட்சியும் 2021 ஆம் ஆண்டில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(ஒன்றுபட்ட மார்க்சிஸ்டு-லெனினிஸ்டு) தலைமையிலான ஆட்சிக்கு தந்து கொண்டிருந்த ஆதரவை விலக்கிக் கொண்டன. நேபாள காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு இரு கட்சிகளும் ஆதரவளித்தன.

இந்த இரு கட்சிகளோடு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(ஒன்றுபட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஆகிய மூன்று கட்சிகளும் கடந்த தேர்தலில் இணைந்து போட்டியிட்டு, ஆட்சி அமைத்தன. அணியில் இருந்து பிரிந்து சென்று வெவ்வேறு அணியில் தற்போது போட்டியிட்டாலும், இந்த மூன்று கட்சிகளுக்குமே இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் 30 இடங்கள் கையை விட்டுப் போய் விட்டன. இடங்களின் எண்ணிக்கையில் இடது சாரி அல்லாத மூன்று கட்சிகள் முன்னேற்றம் கண்டுள்ளன. நேபாள காங்கிரஸ், மன்னாராட்சி க்கு விசுவாசமாக இருந்த ராஷ்டிர பிரஜாதந்திர கட்சி மற்றும் புதிதாகத் துவங்கப்பட்ட ராஷ்டிரிய சுதந்திரக்கட்சி ஆகியவை தங்கள் பலத்தை உயர்த்திக் கொண்டுள்ளன.

இடதுசாரிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்க முடியும். நேரடித் தொகுதிகளில் பெரும் வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. அதற்கு மாறாக, வலுவிழந்து வந்த நேபாள காங்கிரசுக்கு இரண்டு இடதுசாரிக் கட்சிகள் தந்த ஆதரவு அக்கட்சிக்கு உயிர் கொடுத்து, பெரும் பலத்தை யும் கொடுத்திருக்கிறது. 

கூட்டணியாக நின்று வெற்றி பெற்றுள்ளதால், இரண்டு இடதுசாரிக் கட்சிகளும் ஆட்சியிலும் இடம் பிடித்துத் தொடரவே வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த ஆட்சியில் அவர்களுக்கு இருந்த பிடி தளர்ந்துள்ளது. இடதுசாரி ஒற்றுமை என்பது மீண்டும் முன்னெடுக்க வேண்டிய அம்சம் என்பதை அந்த சக்திகளுக்கு நேபாள  மக்கள் அளித்த வாக்குகளின் எண்ணிக்கை காட்டுகிறது. கூடுதலாக, கட்சிகளுக் காக மக்கள் அளித்த வாக்குகளில் முதலிடத்தை  நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒன்றுபட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)தான் பெற்றிருக்கிறது என்பது மட்டும் நம்பிக்கை தருவதாக உள்ளது.

;