headlines

img

தேவையற்ற பிடிவாதம் விபரீதத்தை உருவாக்கும்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்தாண்டு நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை   ரத்து செய்ய வேண்டுமென்று பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. எனினும் தேர்வை நடத்துவதில் மத்திய அரசு பிடிவாத மாக இருக்கிறது.  இந்த நுழைவுத் தேர்வுகளில் 26 இலட்சத் திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க வேண்டியுள்ளது. அவர்களை தேர்வு மையத் திற்கு அழைத்து வரும் பெற்றோர்களையும் சேர்த் தால் 50 லட்சம் பேர் தேர்வு மையங்களுக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. இது நோய்த் தொற்றை பரவச் செய்யும் வாய்ப்பை அதிகப்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் பல்வேறு முறைகளில் முடக்கத்தை அறிவித்த மத்திய அரசு இந்த விஷயத்தில் தேவை யற்ற பிடிவாதத்தை காட்டுவது நல்லதல்ல.

மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டு மென்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டது. அதை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு கூட அனுப்பாமல் மோடி அரசு உதாசீனப் படுத்தியது. 

தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டு தோறும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி களில் 4150 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 1700 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. நீட் தேர்வை சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி பாடத்திட்டங்க ளை அடிப்படையாக கொண்டு படித்த மாண வர்களால் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. நீட் தேர்வு எழுத கடந்தாண்டை விட தமிழகத்தில் இந்தாண்டு 13 சதவீதம் குறை வாகவே மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்தாண்டு தமிழக மாணவர்கள் போதுமான அளவு தேர்ச்சி பெறவில்லை. அந்த பயத்தின் காரணமாகவே இந்தாண்டு விண்ணப்பித்துள்ள வர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்ற தமிழக அமைச் சரவையின் முடிவு சட்டமாக்கப்படாததால் அதற்கான வாய்ப்பும் இந்தாண்டு இல்லை. 

நீட் தேர்வே தேவையில்லை என்ற நிலைப் பாட்டிலிருந்து மாறி இந்தாண்டு மட்டுமாவது தேர்வு வேண்டாம் என்ற நிலைக்கு மாநில அரசு வந்தது. இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கொரோனா முடிந்தபிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்று கூறியுள்ளார்.

நீட் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வுகளை நடத்தாததால் ஒன்றும் குடி முழுகிவிடப் போவதில்லை. கொரோனா அபாயம் நீங்காத நிலையில் வம்படியாக நுழைவுத் தேர்வை நடத்தும் முடிவை கைவிட வேண்டும். அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு என்பது மாநிலங்களில் அதிகாரத்தை பறிப்பதாகவே உள்ளது. மருத்துவ மற்றும் பொறி யியல் படிப்புக்கான சேர்க்கையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளுமாறு விடுவதே பொருத்தமாக இருக்கும். '

 

;