headlines

img

கூட்டுறவுக்கு வேட்டு வைக்கும் ஒன்றிய அரசு

குஜராத் மாநிலத்தில் ஆனந்த் என்ற ஊரை தலைமையிடமாகக்  கொண்டு ஆனந்த்  பால்  உற்பத்தியாளர்கள் சங்கம் (அமுல்) தொடங்கப் பட்டு வலுவான கூட்டுறவு அமைப்பாகத்   திகழ்கிறது. பால் உற்பத்தியாளர்களும் பாலை வாங்கி பயன்படுத்தும் நுகர்வோரும் பயனடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தரமான கூட்டுறவு நிறுவனமாக, இதனை இந்தியாவின் மில்க் மேன் என்று அழைக்கப்பட்ட மறைந்த வர்கீஸ் குரியன் உருவாக்கினார். அப்படிப்பட்ட அமுல் நிறுவனத்தை குஜராத் மாநிலத்தை ஆளும் பாஜகவினர் சர்ச்சையில் சிக்க வைத்துவிட்டனர்.

 பிற மாநிலங்களில் பால் உபபொருட்களை மட்டும் விற்பனை செய்து வந்த அமுல் நிறுவனம்  தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பால் கொள்முதல் செய்ய உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. இது சரியான முடிவல்ல. பிற மாநிலங்களில் பால் கொள்முதல், குளிரூட்டும் நிலையம் அமைப்பது போன்ற செயல்கள் கூட்டுறவு அமைப்புகளி டையே  மோதல் போக்குக்கு வழிவகுத்து விடும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல்  செய்ய கூட்டுறவு அமைப்புகள் உள்ளன. தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அத்தகைய பணியில் ஈடுபட்டுள்ளது.  தனியார் பாலை விட ஆவின் பால் விலை குறைவு என்பதால், பொதுமக்கள்  ஆவின் பாலை விரும்பி வாங்குகின்றனர்.ஆனால் பாலுக்கு கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்வதாக தமிழக விவசாயிக ளுக்கு அமுல் வலைவிரிக்கிறது. இதனால் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் வெகுவாக குறைந்து மூடும் நிலைக்குத் தள்ளப்படும்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அளவில் கூட்டுறவுத் துறைக்குத்  தனியாக ஒரு கேபினட் அமைச்சராக உள்துறை அமைச்ச ரான அமித்ஷா நியமிக்கப்பட்டார். அவர் அந்த பொறுப்பை ஏற்ற பின் தனது மாநில கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த பிறமாநிலங்களில் உள்ள கூட்டுறவு அமைப்புகளைச் சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 

கர்நாடகாவில்  பால் மற்றும் பால் பொருட்க ளுக்கான கூட்டுறவு அமைப்பின் பெயர் நந்தினி. கர்நாடக மக்களின் உணர்வோடு கலந்த நந்தினிக்குப் போட்டியாக அம்மாநிலத்திற்குள் அமுல் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த முயன்றது. இதற்கு அம்மாநில விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பின்வாங்கியது. இது  சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலிலும் வலு வாக எதிரொலித்தது. இதன் பின்னரும் ஒன்றிய அரசும் அமித்ஷாவும் திருந்துவதாக இல்லை.  எனவே தமிழக அரசு, ஆவின் நிறு வனத்தை அழிக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை மாநில விவசாயிகளின் ஆதர வோடு தடுத்து நிறுத்த வேண்டும். 

;