headlines

img

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரசில்  பாலி யல் குற்றவாளியான போலே பாபா எனும் போலிச் சாமியார்  நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற 134 பேர், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

சாமியார்கள் தங்களின் சுயநலத்திற்காக மத போதை ஏற்றும் மூடநம்பிக்கைகளின்  விளைவே இந்த உயிரிழப்புகள். போலிச் சாமியார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுத்து வைத்து வணங்கினால் நினைத்ததெல்லாம் நடக்கும் என்று கடந்த 20 ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்யப்பட்டி ருக்கிறது. காலடி மண் மட்டுமல்ல, போலே பாபா வின் கால் பாதங்களைக் கழுவும் நீர் மற்றும் உட லைக் கழுவும் நீரும் புனிதமானது என, கற்பிக்கப் பட்டிருக்கிறது. 

இதன் விளைவாகக் கல்வி, பொருளாதாரம், பகுத்தறிவு உள்ளிட்டவற்றில் பின்தங்கியிருக்கும் அப்பாவி மக்கள் இதனை உண்மை என நம்ப வைக்கப்பட்டிருக்கின்றனர்.  இதனை பாஜகவின் ஆதித்யநாத் அரசு வேடிக்கை பார்த்தது மட்டு மல்ல, தங்கள் கட்சியின் பிரச்சாரகராகவும் போலே பாபாவைப் போற்றியிருக்கிறது.  ஜாடிக்கேற்ற மூடி போல் பாஜகவும், அந்த போலிச் சாமியாரும் இணைந்து  மதத்தின் பேரில் அரசியல் ஆதா யம் தேடியிருக்கின்றனர். 

பிரதமர் மோடியால்  “உலகின் எஜமானர்” என்று போற்றப்பட்டிருக்கிறார் போலே பாபா. மோடி யின் படத்தை வைத்து  போலே பாபாவின் யுடியூப் சேனலில் பாடல் நீண்டநாளாக ஒலிபரப்பப்பட்டு வந்தது.  ஆனால் இந்த உயிரிழப்பு சம்பவத்திற்குப் பின்னர்  உடனே அந்த வீடியோக்கள் அனைத் தும் அகற்றப்பட்டிருக்கின்றன. இதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

போலே பாபா 28 வருடங்களுக்கு முன்பு உத்த ரப்பிரதேச காவல்துறையில் பணியாற்றிய போது ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள் ளாக்கியதற்காக நீண்ட நாள் சிறைத் தண்டனை பெற்றிருக்கிறார். அதன் பின்னர் வெளியே வந்து நான் நேரடியாகக் கடவுளிடம் பேசி வருகிறேன்; நான் கடவுள் எனக் கூறி  பல்வேறு வகையில் மக் களை ஏமாற்றியிருக்கிறார். தற்போதும் ஆக்ரா உள்ளிட்ட 5 இடங்களில் இவர் மீதான கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கிறது.  இப்படிப்பட்ட ஒரு பாலியல் குற்றவாளியை எதற்காகப் பிரதமர் மோடி ‘உலகின் எஜமானர்’ எனப் போற்றினார் எனத் தெரியவில்லை.

போலே பாபாவின் வழிபாட்டு நிகழ்ச்சியில் ஊடகங்கள் நுழைய அனுமதியில்லை. வீடியோ எடுக்கவும் அனுமதியில்லை. அப்படியென்றால் வழிபாட்டு நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என் பதை மாநில அரசு கவனிக்க வேண்டாமா? இந்த உயிரிழப்புக்கு பாஜக மாநில அரசு முழு பொறுப் பேற்க வேண்டும். ‘இருப்பவர்கள் கண்களை  இறப்பவர்கள் திறக்கிறார்கள்’ என்ற முதுமொழிக் கேற்ப, இழிவானவை எல்லாம் புனிதமாக இத்தனை பெரிய உயிர்ப் பலி நேர்ந்துள்ள பின்ன ணியில், இனியேனும் மதத்தின் பேரில் திணிக் கப்படும் மூடநம்பிக்கையிலிருந்து மக்கள் விழிப் படைய வேண்டும்.
 

;