headlines

img

பிரதமரின் பெருமிதத்தில் நியாயம் இல்லை

இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமை ஒரு நாளில் மட்டும் புதிதாக 10 ஆயிரத்து 667 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 91 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள உயிரி ழப்புகள் அடிப்படையில் உலக நாடுகள் வரி சையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால் பிரதமர் மோடி இன்னமும் கூட நிலை மையின் விபரீதத்தை உணர்ந்ததாக தெரிய வில்லை. இந்தியா மக்கள் தொகை மிகுந்த நாடு என்றும், மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது நம் நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் அடுத்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரிக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

ஆனால் முதல்வர்களுடனான ஆலோசனை யில் பேசிய பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப் படுத்தும் விசயத்தில் உலக நாடுகள் நம்மை ஆச்சரியமாகப் பார்க்கின்றன. பல நாடுகள் இதைப் பற்றித்தான் விவாதிக்கின்றன என்றெல் லாம் சுயதிருப்தியின் எல்லைக்கே செல்கிறார். 

மாநில அரசுகளை ஒருங்கிணைத்து செயல் படுவதில் மத்திய அரசு மிகவும் மெத்தனம் காட்டு கிறது. மாநிலங்களுக்கு தேவையான நிதி உத வியை தர மறுக்கிறது. தமிழகம் உட்பட பல மாநில முதல்வர்கள் இதுகுறித்து தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கை வலித்துப் போனது தான் மிச்சம். ஆனால் கொரோனா வைரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த முறையில் செயல்படு வது கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது என பிரதமர் பெருமிதப் படுகிறார்.

விவசாயத்துறையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள் ளது. குறிப்பாக சிறு, குறு தொழில்கள் அதலப் பாதாளத்தில் விழுந்துகிடக்கின்றன. நெசவு உட்பட பல்வேறு தொழில்கள் நசிவடைந்துள் ளன. ஆனால் பிரதமரோ பொருளாதாரம் மீட்சி அடைவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும், மின் நுகர்வு, இரு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்சனையை கையாள்வதில் மத்திய அரசு முழு தோல்விய டைந்துள்ளது. இன்னமும் கூட சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள் ஏராளம். ஆனால் பிரதமரோ புலம் பெயர்தொழி லாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு வந்து சேர்ந்துவிட்டதாக பொய்யான சித்திரத்தை தீட்டுகிறார். 

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்றும், இறப்பு விகிதமும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசின் அணுகுமுறை முற்றி லும் நேரெதிராக உள்ளது. உண்மை நிலையை புரிந்து கொண்டு இனியாவது ஆக்கப்பூர்வமாகச் செயல்பட பிரதமர் மோடி முன் வர வேண்டும்.

;