headlines

img

பட்ஜெட் தாக்குதல்!

ஒன்றிய அரசு 2023- 24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை  தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் அது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மீதான கொலை வெறித் தாக்குதலாகவே மாறி யிருக்கிறது.

வருமான வரி விலக்கு அளிப்பதிலும் ஒன்றிய அரசு தனது தில்லுமுல்லு வேலையைக் காட்டி யிருக்கிறது. புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் வரி செலுத்துபவர்களுக்கு ரூ. 7 லட்சம் வரை வரி விலக்கு என ஒருபுறம் அறிவித்தது. ஆனால் மறுபுறம்  இந்த திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, கல்விக்கடன், சேமநல நிதிக்கான சேமிப்பு உள்ளிட்டவைக்கு வரிச் சலுகை இல்லை என அறிவித்திருக்கிறது. 

அதாவது பிரிவு 80 சி -யின் கீழ் வரும் 1.5 லட்சம்,  80சிசிடி - யின் கீழ்  50 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்திற்கான வரிச்சலுகை இல்லை என்கிறது. அப்படியென்றால் ரூ.5 லட்சம் வருமா னம் வந்தாலே 10 சதவிகிதம் வரி செலுத்தியாக வேண்டும். இதில் எங்கே இருக்கிறது வரி விலக்கு?

அதாவது இதுவரை நடுத்தர மக்களிடம் இருந்து வந்த சேமிப்பு பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் சூழ்ச்சியும் இதில் அடங்கியிருக்கிறது. சாதாரண மக்களின் சேமிப்புதான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும் இந்தியாவை காப்பாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.  புதிய வரி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 5 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். ஆனால் பழைய திட்டத்தில் 2.5 லட்சம் வருமானம் பெற்றாலும் 5 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். பண வீக்கம் மற்றும்  அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வு எல்லோ ருக்கும் ஒன்றுதானே. அப்படியிருக்கையில்  ஏன் புதிய வரி விகிதத்திற்கு மட்டும் வரி விலக்கு? இது  எல்லோரையும்  புதிய வரி விகி தத்திற்கு மாற வைக்கும் உத்தியே ஆகும்.

ஆனால் மறுபுறம் ரூ.5 கோடிக்கு மேல் வருமா னம் ஈட்டும் பணக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த கூடுதல் வரி 37சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதே போல் ரயில்வே துறை அரசின் கையில் இருந்த போது 2014-19 வரை ஆண்டிற்குச் சராசரியாக ரூ. 24,374 கோடி மட்டுமே ஒதுக்கியது. ஆனால் தனியாருக்கு கொடுத்தவுடன் கடந்தாண்டு 77,171 கோடியும், இந்த நிதியாண்டில் ரூ.2.40 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்திருக்கிறது. அப்படி யென்றால் இது யாருக்கான பட்ஜெட்?

இந்த பட்ஜெட்டில் ஏற்கனவே கொடுத்து வந்த  கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சிக்கான நிதி யையும்  வெட்டி குறைத்திருக்கிறது. அதே நேரம் அரசின் வசம் ஒரு 5ஜி சேவை கூட இல்லாத நிலையில்,  5ஜி சேவையை பெற்றிருக்கும் அம்பானி, அதானிகளை காப்பாற்ற 100 ஆய்வு கூடங்களை அமைக்கிறது. அப்படியென்றால் இந்த பட்ஜெட் யாருடைய நலனைப் பாதுகாப்ப தற்கான பட்ஜெட்? 

;