headlines

img

நிதியமைச்சரின் அறிவிப்புகள் மந்த நிலையை போக்காது

நாடு முழுவதுமுள்ள தொழில்துறைகள் அனைத்தும்  மந்த நிலையை எதிர்கொண்டுள் ளன. வாகன உற்பத்தித் துறையில் மந்தநிலை தோன்றிய பின்னர், அசோக் லேலண்டு, போர்டு, டாடா மோட்டார்ஸ், டிவிஎஸ் போன்ற முன்னணி  மோட்டார் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம்  அறிவிக்கப்பட்டது. இதனால்  தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.   மோட்டார் வாகனத்துறையில் மட்டுமல்ல நுகர்வு பொருட்களின் துறையிலும் இப்போது மந்தநிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்காவிட்டால், இந்த துறையிலும் ஆட்குறைப்பு இருக்கும் என்று அந்த நிறுவனங்களே அறிவித்துள்ளன. இந்தி யாவின் புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி இது தொடர்பாக கவலை வெளியிட்டுள் ளது. ஜிஎஸ்டியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த நிறுவனம்  8,000 முதல் 10,000 வரை தொழி லாளர்களைக் குறைக்கப்போகிறது. 

ஜிஎஸ்டியில் எல்லா வகையான பிஸ்கட்டு களுக்கும் 18விழுக்காடு வரி விதிக்கப்பட்டதால் எல்லா நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு சற்று விலையேற்றி விற்கத் தொடங்கின. விளைவு, படிப்படியாக விற்பனை குறையத் தொடங்கியது. இந்தியாவின் மிகப் பெரிய பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியாவும் தப்பவில்லை.5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டை வாங்குவதற்கே வாடிக்கையாளர்கள் இரண்டு முறை சிந்திக்கிறார்கள் என்றும் பொருளாதா ரத்திலும் தீவிர பிரச்சனை உள்ளது என்றும்  பிரிட்டானியாவின் நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி கூறுகிறார். கிராமப்புற சந்தைகளில் ஏற்பட்டுள்ள விற்பனை வீழ்ச்சியால், அதிவேக நுகர்வு பொ ருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மிக மோச மாகப் பாதிக்கப்பட்டுள்ளன. விலை குறைவான பொருட்கள் கிராமப்புற சந்தைகளில் அதிகம் விற்பனையாகும். ஆனால், இந்த பொருட்களின் தயாரிப்பும் மந்தநிலையை எதிர்கொண்டுள்ளது.இந்த நிலையில்  உள்நாட்டு மற்றும் புதிய உற் பத்தி நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி  30 சதவீதத்திலிருந்து 25.2 சதவீதமாக குறைக்கப்படு வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

கிராமப்புற அளவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வேலைஉறுதித்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல், வேளாண் துறையின் வளர்ச்சிக்கு  ஊக்கமளித்தல், விவசாயிகளின் இடுபொருட்களுக்கு மானியம், குறைந்த விலை யில் உரம், கடனுதவி, பாசன வசதிகளை அதி கரித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து கிரா மப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குக் கடன் சலுகை, வட்டி மானி யம், உற்பத்தி பொருட்களுக்கான சந்தையை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவற்றைச் செய்தால் தான் பொருளாதார தேக்க நிலையிலிருந்து நாடு விடுபடும். இவற்றைச் செய்யாமல் பெரு நிறு வனங்களுக்கு வரியைக் குறைப்பதால் எந்த மந்தமும் மறையப்போவதில்லை. இதுதான் கடந்தகால வரலாறும் அனுபவமும்கூட.

;