headlines

img

கூக்குரலும், அபயக்குரலும்

242 கோடி மரங்களை நட்டு சத்குரு ஜக்கி  வாசுதேவ் கனவை நனவாக்குவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.  கார்ப்பரேட் சாமியாரும், மத்திய ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு நெருக்கமானவருமான ஜக்கி வாசுதேவ் “காவிரி கூக்குரல்” என்கிற பெயரில் பயணம் ஒன்றை நடத்தி வருகிறார். 242 கோடி மரங்களை நட திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக ஒவ்வொருவரும் மரம் ஒன்றுக்கு ரூ.42 வீதம் பணம் தர வேண்டுமென்றும் வசூல் வேட்டை நடத்தி வருகிறார். 

காவிரி நதியிலிருந்து ஒவ்வோராண்டும் தமிழ கத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் காலத்தே கிடைப்பதில்லை. இதுகுறித்து வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகள் நடைமுறைப்படுத் தப்படுவதில்லை. இதுகுறித்து காவிரி பாசன விவசாயிகளின் கூக்குரலை ஜக்கி போன்ற வர்கள் ஒருபோதும் காதில் வாங்கிக்கொள்வ தில்லை. ஆனால் தற்போது காவிரியின் கூக்குரல் என்ற பெயரில் மரம் நடப் போவதாக புறப்பட்டி ருக்கிறார். இதற்காக பலரையும் வளைத்துப் பிடிக்கிறார்.  மாநில முதல்வரான எடப்பாடி பழனிசாமி மரங்களை நட்டு ஜக்கியின் கனவை நனவாக்கு வோம் என்று மரம் நடும் இயக்கத்தை ஜக்கிதான் கண்டுபிடித்ததுபோல புல்லரித்துப் பேசியிருக்கி றார். 

ஆதிசிவனுக்கு சிலை வைப்பதாக கூறிக் கொண்டு காட்டு மரங்களை அழித்தவர்தான் ஜக்கி. இதனால் யானைகளின் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டு யானைகள் திசைமாறி ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. மேலும் இவரது வன ஆக்கிரமிப்பை எதிர்த்த பழங்குடி மக்கள் மீது கொடுமையான தாக்குதல் நடத்தப் பட்டது. அப்போது அவர்களுக்கு துணை நின்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்.  ஏராளமான தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் மரம் நடும் இயக்கத்தை நாடு முழுவதும் செய்து வருகின்றனர். இதற்கான விழிப்புணர்வு பொதுமக்களிடமும் அதிகரித்து வருகிறது. எதையும் விளம்பரமாக்கி, வியாபார மாக்கி வரும் ஜக்கி இதை புரிந்துகொண்டு வசூல் வேட்டையில் இறங்கியுள்ளார். 

தமிழகத்தின் இயற்கை வளங்களை பாது காக்கும் அக்கறை முதல்வருக்கு உண்மையி லேயே இருக்குமானால் அரசே இந்த இயக் கத்தை நடத்தலாம். விவசாயிகள் யாரிடமும் காசு வாங்கிக் கொண்டு மரம் வளர்ப்பதில்லை. விவசாயத்தையும், விவசாயிகளையும் பாது காத்தாலே மண் வளத்தையும், இயற்கை வளத் தையும் பாதுகாக்க முடியும். ஆனால் விவசாயி களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஜக்கி போன்ற போலிகளுக்கு முட்டுக்கொடுக்கிறார்கள்.  இதே ஆசாமி கடந்த முறை நதிகளை மீட்கப் போவதாக புறப்பட்டார். அது என்னாயிற்று என்று தெரியவில்லை. அடுத்து மரத்தை முன்னி லைப்படுத்துகிறார். மாநில அரசே இவர்க ளின் பின்னால் செல்வது தவறான முன்னு தாரணம் ஆகும்.

;