headlines

img

தாகம் தணியுமா?

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் இன்றும் பகல்கனவாகவே இருந்து வருகிறது. தற்போது கிடைத்து வரும்  குடிநீரும் தொடர்ந்து கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாகியிருக்கிறது.  

2019 சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடியால் துவங்கப்பட்ட  ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டமும் தோல்வியில் முடிந்திருக்கிறது என்ற புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பல ஆண்டுக ளாகத் தேசிய ஊரக குடிநீர் திட்டம் செயல்பாட்டி லிருந்து வந்தது. ஆனாலும் அதன் இலக்கு களை எட்ட முடியவில்லை. உதாரணமாக  2012 முதல் 2017 வரையில் ரூ. 89,956 கோடி அதாவது 90 சதவிகிதம் செலவிடப்பட்டது. ஆனாலும் அதன் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் தேசிய ஊரக குடிநீர் திட்டம் தோல்விய டைந்ததாக இந்திய தலைமை கணக்கு தணிக்கை யாளர் அறிக்கை தெரிவித்தது. 

உடனே  பிரதமர் மோடி 2019 சுதந்திர தினத்தில் குடிநீர் வழங்கும் திட்டத்தின் பெயரை ‘ஜல் ஜீவன் மிஷன்’ என மாற்றினார். மேலும் தனது உரையில் 2024 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு குடும்பத் திற்கும் குடிநீர் இணைப்பு வழங்கி பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது உத்தரவாதப்படுத்தப்படும். இந்த பணிக்காக ரூ. 3.6 லட்சம் கோடி செல விடப்படும். இதன் மூலம்  தாய், தங்கைகள் வாழ்க்கையின் பெரும் பகுதியைத் தண்ணீர் பெறுவதற்காகப் போராடுவது தடுக்கப்படும் என்றார்.

ஆனால் ஒவ்வொரு நிதியாண்டிலும் அந்த திட்டத்திற்கு ஒதுக்க வேண்டிய தொகையை முழுமையாக ஒதுக்க மறுப்பதோடு, உண்மை க்கு மாறான புள்ளி விபரங்களையும் அளித்து வருவதும் அம்பலமாகியிருக்கிறது. 2021-22 ஆம்  நிதியாண்டில்  ஜல் ஜீவன் மிஷன்  திட்டத்திற்கு ரூ.92,309 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட்டின் திருத்திய மதிப்பீட்டில் ரூ. 45,011 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலும் வெறும் ரூ.19 ஆயிரம் கோடி மட்டுமே செலவிடப்பட்டி ருக்கிறது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கியிருக்கும் இணைப்புகளில் 40 சதவிகிதம் குடிநீர் விநியோகமின்றி செயல் டாமல் இருக்கிறது என்கின்றன ஆய்வு விபரங் கள்.  இதுதான் மோடி அரசு 2024க்குள் அனைவருக் கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை அமல்படுத்தும் லட்சணம்.

பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு. அந்த பொறுப்பைத் தட்டிக் கழித்து அதனைத் தனியாரிடம் கொடுத்து வியா பாரமாக மாற்றுவதில்தான் மோடி அரசு முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.  இந்தியா  ஏற்கனவே அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நாடுகளின் பட்டியலில் இருக்கிறது. ஒன்றிய அரசு ‘இந்தியா வாட்டர் பிட்ச்-பைலட்-ஸ்டார்ட் அப் ‘ என்ற பெயரில் 76 நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்க அனுமதி அளித்திருக்கி றது. எனவே ஒன்றிய அரசு நிலத்தடி நீர் உறிஞ்சி சுரண்டி விற்கப்படுவதை தடை செய்ய வேண்டும்.

;