headlines

img

‘தோழர்களே’ ‘செவ்வணக்கம்’

! அஸ்ஸாமில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களில் சிலரை தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்திருப்பது குறித்து ஊடகங்களில் வந்துள்ளது. அவர்களுக்கு எதிராக தேசியப் புலனாய்வு முகமை மே 29 அன்று தாக்கல் செய்துள்ள குற்ற அறிக்கையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மாமேதை லெனின்  புகைப்படத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார் என்றும், அவர் தன் நண்பர் களைத் ‘தோழர்களே’ என்று குறிப்பிட்டிருந்த தாகவும், ‘செவ்வணக்கம்’ (‘லால் சலாம்’) என்று வாழ்த்தியதாகவும், கூறியிருப்பதுடன் அவரிட மிருந்து ‘சோசலிசத்திற்கு ஓர் அறிமுகம்’ (‘An Introduction to Socialism’) என்னும் புத்தகத்தை யும், ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ (‘Commu nist Manifesto’) என்னும் புத்தகத்தையும் கைப்பற்றியதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. இவற்றின் மூலமாக தேசியப் புலனாய்வு முகமை, அவர்கள் ‘மாவோயிஸ்ட்டுகள்’ என்று  நிரூபிக்க முயன்றிருக்கிறது.

இவை அனைத்தும் முன்னணி ஊழியர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்க இயக்கங்களின் உறுப்பி னர்கள், குறிப்பாக தொழிலாளர் வர்க்க இயக்கத்திலும், சாமானிய மக்கள் மத்தியில் செயல்படும் இடதுசாரி மற்றும் முற்போக்குப் பிரி வினரை, மிரட்டிப் பணியவைத்திட மேற்கொள்ளப்பட்ட குரூரமான முயற்சி என்பதைத் தவிர வேறல்ல.   செவ்வணக்கம் என முழங்குவதையோ, அல்லது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை அல்லது அதுபோன்ற முற்போக்கு இலக்கியங்களை வைத்திருப்பதற்கான உரிமைகளையோ எவரொருவரும் பறித்திட முடியாது. அல்லது அவ்வாறு வைத்திருப்பது கைது செய்தற்குரிய குற்றமும் கிடையாது. தேச விரோத நடவடிக்கை களுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கமும், தொழிற் சங்கங்களும் மேற்கொள்ளும் போராட்டங்களை தேசியப் புலனாய்வு முகமையும் மற்றும் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கமும் தங்க ளின் தொழிலாளர் வர்க்க விரோத, மக்கள் விரோத மற்றும் நவீன தாராளமய நிகழ்ச்சி நிரலை அமல்படுத்துவதன் மூலம் நசுக்கிட முடியும் என நினைத்திருக்கலாம்.

அவ்வாறு அவர்கள் நினைப்பார்களேயானால் தவறு செய்கிறார்கள். குறிப்பாக, சமூக முடக்கக் காலத்தில் இத்தகைய இழிவான உத்திகளில் பாஜக அரசாங்கம் இறங்கியிருப்பது கண்டிக்கத் தக்கதாகும். இது, தொழிலாளர்களையும், உழைக்கும் மக்களையும் அடிமைநிலைக்குத் தள்ளி, நாட்டை அந்நிய அல்லது உள்நாட்டுப் பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் நிலப்பிரபுக்கள் கூட்டத்திற்கு விற்றிடும் நவீன தாராளமயக் கொள்கைகளை நிறைவேற்றத் துடிப்பதில் ஏற்பட்டுள்ள வெறித்தனத்தை காட்டுகிறது. இத்தகைய மிரட்டிப்பணிய வைத்திடும் முயற்சிகளை மற்றும் அச்சுறுத்தல்களை, தொழி லாளர் வர்க்கம் ஒருபோதும் சகித்துக்கொள் ளாது.  எட்டுத்திக்கும் முழங்குவோம்...  தோழர்களே, செவ்வணக்கம்!

;