headlines

img

நம்பிக்கை மட்டும் போதாது; நடவடிக்கை வேண்டும்

பணவீக்கத்தை சிறப்பாக கையாள்வதில் இந்தியா வெற்றி பெறும் என்று ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித் துள்ளார். அமைச்சரின் நம்பிக்கை மட்டுமே பண வீக்கத்தை கட்டுப்படுத்த உதவாது. பணவீக் கத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால் விலை வாசி உயர்வை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டும்.  ஆனால் அமைச்சரின் பேச்சில் அதுகுறித்து எதுவுமில்லை.

வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு வாசலில் நின்று மணியோசை எழுப்பினால் கொரோனா நோய்க்கிருமி அண்டாது என்பது போன்று வெறும் நம்பிக்கை மட்டுமே பணவீக்கத்தை கட்டுப் படுத்தாது. 

இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து அதி கரித்து வருகிறது. குறிப்பாக நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கடந்த பல மாதங்க ளாக தொடர்ந்து உயர்ந்து வந்த பணவீக்க அளவு ஏப்ரலில் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.8 சதவீதமாக உயர்ந்தது. 

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டுத் தேவை குறைந்திருப்பது ஆகியவை பணவீக்கத்திற்கு முக்கியக் காரணங்களாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டனர். இந்தி யாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 2022-23ஆம் நிதியாண்டில் 7.6 சதவீதமாகவும், 2023-24ஆம் நிதியாண்டில் 6.7 சதவீதமாகவும் குறைய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டது.

பணவீக்கம் மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான விலை உயர்வை குறைக்க வேண்டுமானால் பெட்ரோ லியப் பொருள்கள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை கூறினர். ஆனால் ஒன்றிய அரசு இதை ஏற்க மறுத்து தொடர்ந்து வரியை ஏற்றி வந்தது.

மாற்று வழியாக உள்நாட்டுத் தேவையை அதி கரிக்க வேண்டும். கடுமையான வரிச்சுரண்டல் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்க ளின் விலை உயர்வு, சிறு,குறு உற்பத்தி தொழில் வீழ்ச்சி, வேலையின்மை அதிகரித்தது, 100 நாள் வேலைத்திட்டம் போன்ற வேலைவாய்ப்பு திட்டங் களை வெட்டிச்சுருக்குவது போன்றவற்றால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து உள்நாட்டு தேவை மேலும் மேலும் சுருங்கி வருகிறது.

இந்தியாவின் முக்கியமான எட்டு உற்பத்தித் துறைகளில் செப்டம்பரில் 7.8 சதவீதமாக இருந்த வளர்ச்சி அக்டோபரில் 0.1 சதவீதமாக வீழ்ச்சிய டைந்துள்ளது. இந்நிலையில் எவ்வாறு பொருளா தாரம் மீட்சி பெறும்.

இந்தியப் பொருளாதாரத்தை நொறுக்கும் வேலையில்தான் பிரதமரும், ஒன்றிய நிதிய மைச்சரும் ஈடுபடுகின்றனர். ஆனால் அவ்வப் போது பொருளாதாரம் வளர்ச்சியடைவதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். இப்போது பின்பற்றும் நாசகரப் பொருளாதாரக் கொள்கையை கைவிடாமல் பொருளாதாரம் மீட்சிக்கு வழியில்லை. 

;