இந்தியா-சீனா வர்த்தகம்: மறுசீரமைப்புக்கான நேரமிது
சமீபத்திய உலக அரசியல் மற்றும் வர்த்தக மாற்றங்கள் இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் தங்கள் நீண்ட வர்த்தகப் போரில் ஒரு திருப்பு முனையை எட்டியுள்ளன.
அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா சீன பொருட்கள் மீதான இறக்கு மதி வரியை 145 சதவீதத்திலிருந்து 30 சதவீத மாக குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதே போல், சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீதான தனது வரியை 125 சதவீதத்திலிருந்து 10 சதவீத மாக குறைப்பதாக உறுதியளித்துள்ளது. இந்த 115 சதவீத வரிக் குறைப்பு இரு தரப்பிலும் வர்த்த கத்தை பெருமளவு அதிகரிக்கும்.
பெய்ஜிங் இந்த ஒப்பந்தத்தை மிக வேகமாக ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா தனது பொருளாதாரத்தை சீனாவிலிருந்து பிரிக்க விரும்பவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி யுள்ளது.
இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டபடி, இது ஒரு தற்காலிக ஏற்பாடு. நிலைமை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் வர்த்தகப் போரில் ஏற்பட்ட இந்த இடைவெளி, வழங்கல் சங்கிலியில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி யுள்ளது. வழங்கல் சங்கிலியில் இடையூறுகள் ஏற்படும்போது, ஏற்றுமதியாளர்களுக்கு மற்ற நாடுகளில் புதிய வாய்ப்புகள் திறக்கும்.
90 நாள் கால அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் நிறுத்தம் இந்திய வர்த்தகத் துறையினரை கூர்ந்து கவனிக்க வைத்துள்ளது. இந்தியா இப்போது சீனா வுடன் அதன் வர்த்தக நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சீனாவிடம் நுட்பமான அணுகு முறையை கடைப்பிடிக்க வேண்டும், ஏனெனில் அதன் வர்த்தக மற்றும் பொருளாதார சக்தியை நம்மால் புறக்கணிக்க முடியாது.
சீனாவுடன் அமெரிக்காவைப் போலவே, நாமும் சிறந்த இருவழி வர்த்தக சமநிலையை நோக்கி வர்த்தக மறுசீரமைப்பை முன்னெடுக்க லாம். குறைந்த செலவில் தூய்மையான தொழில் நுட்ப ஒப்பந்தங்களிலிருந்து நன்மை பெறுவ தற்கான வழிகளையும் நாம் தேட வேண்டும். இந்தியக் கட்டுப்பாட்டில் உறுதியாக இருக்கும் கூட்டு முயற்சிகள் தொழில்நுட்ப பரிமாற்றத்தை பாதுகாப்பாக மேற்கொள்ள உதவும்.
சந்தேகமில்லாமல், சீனா தனது வணிக உறவுகளுக்கு கொடுக்கும் மதிப்பு எதிர்காலத்தில் இன்னும் வலுவடையும். வர்த்தகத்தின் பொருளா தார விளைவு மிகவும் வலுவாக உள்ளதால், அது காலப்போக்கில் அரசியல் பிரச்சனைகளை மீறி செயல்படும். உலகளாவிய வர்த்தக மறுசீரமைப்பு நடைபெறக்கூடிய இக்காலகட்டத்தில், இந்தியா வும் தனது சீன நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வர்த்தகத் துறையினர் எதிர் பார்க்கின்றனர்.
சர்வதேச வர்த்தகத்தில் நிரந்தர நட்பு அல்லது நிரந்தர எதிரி என்று எதுவும் இல்லை. நலன்கள் மட்டுமே நிரந்தரமானவை. இந்த உண்மையை உணர்ந்து, இந்தியா தனது வர்த்தக உறவுகளை நவீனமயமாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.