headlines

img

அலட்சியம் வேண்டாம்...

கொரோனா தொற்று அண்மைக் காலமாக கட்டுக்குள் இருந்து வருவது மக்களுக்கு ஆறுதல்அளிப்பதாக இருந்தது. ஆனால் மீண்டும்  அதிவேகமாக பரவும் புதிய வகை ‘’பி.1.1.7’’கொரோனாதொற்று பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது என்ன மாதிரியான  விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை  மருத்துவ உலகம் உற்று நோக்கிவருகிறது. அதற்கேற்ப அரசும், மக்களும்  முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 

ஏற்கனவே நாம் எதிர்கொண்டு வரும் கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு 10 முதல் 20 சதவிகிதம் வரை மட்டுமே பரவும்தன்மை கொண்டதாக இருந்தது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு 70 சதவிகிதம் வரை பரவும் ஆற்றல்கொண்டதாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் வழக்கத்திற்கு மாறாக அதிக மரபணு மாற்றம் அடைந்திருக்கிறது. ஒரு வைரசில் உருமாற்றம் நடந்து கொண்டேதான் இருக்கும். அந்த அடிப்படையில் புதிய வகை கொரோனா வைரஸ் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் உணர்த்துகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது உலகில் பரவலாக இருக்கும் கொரோனா வைரஸ் தொடக்கத்தில் சீனாவின் வூஹானில் காணப்பட்ட வைரஸ் கிடையாது. ஐரோப்பாவில் உருவான ‘’டி614ஜி’’ என்கிற வைரஸ்தான் தற்போது உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது. வைரசின் தன்மைகள் மாறும் போது அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் தடுப்பு மருந்துகளும் மாறுபடும்.அந்த வகையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பு மருந்து தற்போது புதிதாகபரவும் கொரோனாவை முழுமையாக தடுக்குமாஎன்ற கேள்வி மருத்துவ உலகில் முன் வந்திருக்கிறது. 

ஆக முன்பை விட நாம் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது மிகவும்முக்கியத்துவம் பெறுகிறது. பிரிட்டனில் தற்போதுபுதிதாக பரவி வரும் வைரஸ் கடந்த நவம்பர் மாதம்முதல் பரவியிருக்கிறது என கணிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கோட்டை விட்டதால், உலகளவில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 2ம் இடத்திலும், உயிரிழப்பில் 3ம் இடத்திலும் இருக்கிறது. ஆனாலும், மோடி அரசுஅதைப்பற்றி கவலை கொள்வதாக தெரியவில்லை.கைதட்டி விளக்கேற்றி மக்களை திசைதிருப்பிகொரோனா தொற்றையும் வழக்கம் போல் தனதுஅரசியல் சுயலாபத்திற்கு பயன்படுத்தியது.அந்த வழியையே தமிழகத்தில் அதிமுக அரசும்பின்பற்றி வருகிறது. ரேசன் கடைகளில் வழங்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து பாக்கெட்டில் அரசு முத்திரையுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கட்சி பொறுப்பும் அச்சிடப்பட்டிருக்கிறது. அப்போதும் கூட மக்களின் உயிர்களை விட அவர்களுக்கு ஓட்டுகளே முக்கியமாக இருக்கிறது. அதிலும் ஊழலுக்கு பஞ்சமில்லை.

அதன் விளைவே இன்று தமிழகத்தில் இருந்துகொரோனா ஒழிந்து விட்டது போன்ற தோற்றம்ஏற்படுத்தப்படுகிறது. இது நல்லதல்ல. தமிழகஅரசு கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை முன்பை விட தீவிரப்படுத்தவேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதியகட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.
 

;