headlines

img

பூவுலகம் வாழ வனங்கள் வாழட்டும்

புவி வெப்ப மயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் மிக முக்கியமான காரணி கார்பன் உமிழ்வாகும். கார்பன் உமிழ்வு அதிகரிக்கும் போது காலநிலை மாற்ற விளைவுகளும் அதி கரிக்கிறது.  எனவே, கார்பன் உமிழ்வைக் குறைத்து  நிகர பூஜ்ஜிய நிலையை அடைய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். உலகின் சராசரி வெப்பநிலை உயர்வைக் குறைந்தது 1.5.டிகிரி செல்சியசுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த பூவுலகை பேரழி விலிருந்து பாதுகாக்க முடியாது என விஞ்ஞா னிகள் எச்சரிக்கின்றனர்.

அதன் தீவிர தன்மையை உணர்த்தும் வித மாக ஆய்வகங்களில் இருக்க வேண்டிய விஞ்ஞா னிகள் தெருக்களில் இறங்கிப் போராடும் சூழல் உலகம் முழுவதும் உருவாகி வருகிறது. ஜெர் மனியில் 2 ஆயிரம் விஞ்ஞானிகள் இணைந்து போர்க்கால அடிப்படையில் பருவநிலை மாற்றத்தைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப்  போராட்டம் நடத்து கின்றனர்.  ஆனாலும் உலக நாடுகள் அதன் தீவி ரத்தை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்பதையே  ஐ.நா ஆய்வும் உறுதிசெய்கிறது.

பாரிஸ் ஒப்பந்தப்படி  கார்பன் வெளியேற்ற அளவு  2019 இல் இருந்ததை விட 2030-இல் 43 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும்.  ஆனால் கார்பன் வெளியேற்றம் குறைவதற்குப் பதிலாக 2010 ஆம் ஆண்டிலிருந்து கடந்தாண்டு வரை  11 சதவிகிதம் கூடியிருக்கிறது என்கிறது ஐ.நாவின் ஆய்வறிக்கை. குறிப்பாக 2022ஆம் ஆண்டு கார்பன் உமிழ்வின் அளவு  2021 ஆம் ஆண்டை விட 0.9 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதாவது 321 மெட்ரிக் டன் அளவு அதிகரித்திருக்கிறது என் கிறது சர்வதேச ஆற்றல் முகமையின் அறிக்கை. 

இந்தியா 2070 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய உறுதி பூண்டிருக்கி றது. அதில் ஒரு முக்கிய அம்சம் பசுமை பரப்பை  அதிகரிப்பதாகும். ஆனால் அதற்கு நேரெதிரான நடவடிக்கையில் மோடி அரசு இறங்கியிருக்கி றது. ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வன பாதுகாப்பு சட்டத் திருத்தங்களில் காடுகளை அழிப்பதே முதன்மை நோக்கமாக இருக்கிறது. இது எப்படி பசுமை பரப்பை அதிகரிக்கும்?

இந்த திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால் காடுகளில் உள்ள இயற்கை மற்றும் கனிம சுரங்கங்களை கார்ப்பரேட்கள் எவ்வித தடை யுமின்றி வெட்டியெடுக்கலாம். காடுகளிலேயே  கட்டுமானங்களை முன் அனுமதியின்றி செய்ய லாம். தனியார் காடுகள் என்றால் வனப் பாது காப்பு சட்டவிதிகள் செல்லாது. பழங்குடி மற்றும் மலைகளைச் சார்ந்து வாழும் மக்களுக்கு இது நாள் வரை  இருந்து வந்த வன உரிமைச் சட்ட பாதுகாப்பு இனி கிடையாது. இந்த அம்சங்கள் அனைத்தும் காடுகளை அழிக்குமே தவிரப் பசுமை பரப்பை ஒருபோதும் அதிகரிக்காது. மோடி அரசின் இந்த மோசடி வேலையை மக்கள் அனு மதிக்கக் கூடாது. வனங்களை பாதுகாக்க அனைவரும் கரம் கோர்க்க வேண்டும்.

;