“அட்லாண்டிக் பிரகடனம்” என்ற பெயரில் ஒரு விஷ அறிக்கையை வெளியிட்டிருக் கிறார்கள் ஜோ பைடனும் ரிஷி சுனக்கும். ஜுன் 8 அன்று வெள்ளை மாளிகையில் இருவரும் சந்தித்துப் பேசி இந்தப் பிரகடனத்தை வெளி யிட்டுள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களில் இருவரும் சந்தித்திருப்பது இது நான்காவது முறை. அமெரிக்க ஜனாதிபதியும் பிரிட்டன் பிரதமரும் மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து, கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள தங்களது நாடுகளின் பொருளாதாரம் பற்றி பேசினார்களோ இல்லையோ, ரஷ்யாவையும் சீனாவையும் எப்படி சுற்றி வளைப்பது என்பதைப் பற்றி விரி வாக பேசியிருக்கிறார்கள்.
பைடனும் சுனக்கும் கடைந்தெடுத்த கம்யூனிச எதிர்ப்பாளர்கள். சோசலிச சீனாவை ஒழித்துக் கட்டுவதே எனது முதல் பணி என்று, எட்டவே முடியாத இலக்கை நிர்ணயித்து தனது பிரதமர் பணியை துவக்கியவர் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு சீனா மீது வெறித்தனமான எதிர்ப்பு.
வாஷிங்டனில் சந்தித்து இவர்கள் இருவரும் வெளியிட்டுள்ள அட்லாண்டிக் பிரகடனத்தில், கடந்த ஓராண்டு காலமாக ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிராக அமெரிக்காவும் பிரிட்ட னும் இணைந்து மட்டுமல்ல, இவர்களோடு ஆஸ்திரேலியாவையும் இணைத்துக் கொண்டு ‘ஆக்கஸ்’ (AUKUS) என்ற பெயரிலான கூட்டணி அமைத்து எப்படியெல்லாம் பொருளாதாரத் தடைகள் மூலமாகவும் ராணுவ ரீதியாகவும் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தி யுள்ளனர்.
ஐரோப்பிய - அட்லாண்டிக் பாதுகாப்பு உடன்பாடு, இந்தோ - பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இதர பிராந்தியங்களில் பாதுகாப்பு ஒத்துழைப்பு என அனைத்து முனை களிலும் ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்க்கும் விதமாகவும் மேலும் மேலும் ராணுவ ரீதியான - பொருளாதார ரீதியான நெருக்கடியை தீவிரப்படுத்தும் விதமாகவும் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து செயல்படுவோம் என்று மேற்கண்ட பிரகடனத்தில் இருவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கெனவே இவர்களது உதவியால் உக்ரைன் போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போரை தூண்டி யதும் உருவாக்கியதும் நீடித்து நடத்திவருவதும் அமெரிக்காவும் அதன் தலைமையிலான நேட்டோ ராணுவமும்தான். எனினும் அதனை மறைத்து, உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி, ரஷ்யாவை சட்டவிரோத நாடு என்று முத்திரை குத்தி அதை சுற்றி வளைப்பதற்கான திட்டங்களையும் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும் பைடனும் ரிஷி சுனக்கும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளை மாளிகை பேட்டியில் பைடனை விட ஒரு படி மேலே போய் போர்வெறிக் கூச்சல் போட்டிருக்கிறார் ரிஷி சுனக். சரியான எஜமான விசுவாசிதான் இவர்.