headlines

img

ஆயிரம் கைகள் மறைத்தாலும்

சோசலிச சீனாவை உலக மக்களிடையே ஓர் எதிரியாக முன்னிறுத்தும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் செயல் திட்டத்தை உலகம் முழுவதி லும் பரப்பும் வேலையை ஆஸ்திரேலியா மேற் கொண்டுள்ளது. இத்தகைய அவதூறு பிரச்சா ரத்தின் நோக்கம், சீனாவின் மீதான தாக்குதலை அமெரிக்காவோ, அதன் கூட்டாளிகளோ பின்னாட் களில் மேற்கொண்டால், அது சரியானதுதான் என்ற மனநிலையை உலக மக்கள் மத்தியில் திட்டமிட்டு கட்டமைப்பதுதான். 

விவசாயம் துவங்கி, தொழில் வளர்ச்சி உள்பட, நவீன விஞ்ஞான தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு வரையிலும் பொரு ளாதாரத் துறையில் அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் மக்கள் சீனம் அசாத்தியமான முறையில் திட்டவட்டமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. அதுமட்டுமல்ல, உலக அரசியல் அரங்கிலும் தனது தடத்தை வலுவாக பதிக்கத் துவங்கியுள்ளது. இத்தகைய பின்னணியில், அமெரிக்க ஏகாதிபத்தியம், சோசலிச சீனாவை எந்த வகையிலேனும் கட்டுப்படுத்துவது அல்லது  நிலைகுலையச் செய்வது என்ற நோக்கத்துடன், பல முனைகளிலிருந்து சீனாவை சுற்றி வளைக் கும் சூழ்ச்சிகளை அரங்கேற்ற முயல்கிறது. அதன் ஒரு பகுதியாகவே யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக, சீனா, உலகைத் தாக்குவதற்கு கொடிய ஆயுதங்களை குவித்துக் கொண்டிருப்பது போல முற்றிலும் பொய்யான, முற்றிலும் அவதூறான வீடியோக்களை ஏரா ளமாக தயாரித்து, ஆஸ்திரேலிய அரசின் ஆதர வுடன் பல நிறுவனங்கள் வெளியிட்டு வருகின் றன. இந்த வீடியோக்கள், சீன ஜனாதிபதி ஜிஜின் பிங்கை, உலகையே விழுங்க வந்தவர் போல சித்த ரிக்கின்றன. சீனாதான் உலகின் நம்பர் ஒன் எதிரி என்று, முற்றிலும் பொய்யாக தயாரிக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் முன்னிறுத்துகின்றன.

சிஐஏ உள்ளிட்ட அமெரிக்காவின் கொடிய உளவு ஸ்தாபனங்களின் உதவியுடன் இத்த கைய டிஜிட்டல் பிரச்சாரத்தை ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ளது.

உண்மையில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளாக உள்ள மேற்கத்திய நாடுகளு டன் ஒப்பிடும் போது மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் மிகக் குறைவான தொகையையே சீனா தனது பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் சீனாவின் மொத்த பொருளாதாரமும் உலகை அழிப்பதற்கான ஆயுதங்களை உற்பத்தி செய்ய பயன்படுத்துவதாக ஆஸ்திரேலிய நிறு வனங்களின் வீடியோக்கள் கூறுகின்றன. 

சீனாவுக்கெதிரான இத்தகைய டிஜிட்டல் பிரச்சாரத்தை வரும் நாட்களில் மிகத் தீவிரமாக மேற்கொள்ளும் பொருட்டு ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து மற்றும் அமெ ரிக்கா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த உளவு ஸ்தாபனங்களிடையே ஒருங்கிணைப்பு ஏற் படுத்தப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. 

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது. ஏகாதிபத்திய அமெரிக்கா என்னதான் முயற்சித்தாலும் சோசலிச சீனா வின் வளர்ச்சியையோ, புகழையோ தடுக்க முடியாது.

;