headlines

img

கொள்முதல் கொள்கையில் மாற்றம் செய்திடுக!

காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் கனமழையின் காரணமாக 2.17 லட்சம் ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உழவர்களு க்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மழைச் சேதப் பகுதிகளை ஆய்வு செய்த தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அ.சக்கரபாணி கூறுகையில், இது இறுதியான புள்ளி விபரம் அல்ல என்றும், பாதிப்பின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல், உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்கள் திடீர் மழை காரணமாக பாதிக்கப் பட்டுள்ளன. தானியங்கள் முற்றி இருந்த நிலை யில் கனமழை பெய்ததால் அறுவடை செய்ய  முடியாத அளவுக்கு மண்ணோடு மண்ணாக பயிர் கள் புதைந்துள்ளன. அறுவடை எந்திரங்களை வயலுக்குள் கொண்டு செல்ல முடியாத நிலை யில், விவசாயிகள் அடைந்துள்ள துயரம் சொல்லி மாளாது.

இந்நிலையில், நெல் கொள்முதல் விதிகளை தளர்வு செய்யுமாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஒன்றிய அரசு விதித்துள்ள விதி களை திருத்தி 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டுமென்றும், முதிர்ச்சியடையாத சுருங்கிய நெல்லின் அளவை நெல்லுக்கான குறைந்த பட்ச வரம்பை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக தளர்த்த வேண்டுமென்றும், சேதமடைந்த, நிறம் மாறிய மற்றும் முளைத்த நெல்லை கொள் முதல் செய்வ தற்கான வரம்பை 5 சதவீதத்திலிருந்து 7 சதவீத மாக தளர்த்த வேண்டுமென்றும் முதல்வர் விடுத் துள்ள கோரிக்கை முற்றிலும் நியாயமானது. இதை ஏற்று உரிய தளர்வுகளை செய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

புவி வெப்பமயமாதல் கடந்த ஐந்தாண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பூமத்திய ரேகை செல்லும் பாதைகளுக்கு அருகில் உள்ள நாடுகளில் அடிக்கடி ஏற்படும் பருவநிலை மாற்றத் தால் தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை  காலங்களில் மாற்றம் ஏற்பட்டு பருவம் மாறிய பெருமழை, புயல், சூறாவளி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் ஏற்படுவது தொடர்கதையாகி வரு கிறது. இதனை வானிலை ஆய்வு மையங்கள் கூட முன்கூட்டியே கணிக்க முடியாத நிலை உள்ளது.

ஏற்கனவே விவசாயம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், விவசாயிகள் கடும் துயருக்கு ஆளாகின்றனர். எனவே ஈரப்பதம் 30 சத வீதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நிரந்தர உலர் எந்திரங்கள் அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே ஒன்றிய அரசின் கொள்முதல் கொள்கையில் மாற்றம் ஏற்படுவது அவசியம். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தர விட்டுள்ளார். முழுமையான ஆய்வுக்கு பிறகு இது  உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

;