headlines

img

எதற்கு வேண்டும் இசை? - நவகவி

போதையை ஊட்டுவதற் கல்ல - நல்ல
பாதையைக் காட்டுவதற்கே..... 
இசை இசை இசை! - இசை
மனிதத்தை மனிதர் நெஞ்சில்
ஒட்டிவைக்கும் பசை பசை பசை!
         எந்த....மிருகமேனும்
         வசனமாகக் கத்திய துண்டா?
         இசை ஒலி எழுப்பி டாத
         பறவை உண்டா சொல்லுக நண்பா?
(போதையை)
இப்போது இசை எப்படி இருக்கு?- அது
மிருக உணர்வை ஊட்டு தென்று
மிருகங்களை அவமதிப்பவன் கிறுக்கு!
         ரவுடித்தனத்தை தனிமனிதரின்
         வில்லத்தனத்தை ரசிக்க வைக்குது
         திரை இசை - அது
பெரும்பாலும் குறை இசை! - அது
கடைவிரிப்பது பெண் தசை.
         வெறி தர அல்ல அன்பு
         நெறிதர வேண்டும் நமக்கு
         இசை இசை இசை இசை!
         விஷம் தரும் என்றால் அது
         இசையல்லஅல்ல கொடிய
         வசை வசை வசை வசை!
(போதையை)
ஓசையுடன் பிறக்குது மழலை.- வானில்
ஆசையுடன் மோதுது கேள்
கருங்குழிக்குள் பிரபஞ்ச இசையை!
         ஓசை அன்றோ இன்பம்? வெறும்
         கூச்சல் கொடிய துன்பம்; அது
         வெறித்தனம் - புவி
வாழ்வே ஒரு கீர்த்தனம்! -இதை
இசையால் உயர் வாக்கணும்!
         இடிகளை அடுக்கி எழுப்பும்
         இசைக் கோபுரம் தான் புரட்சியின்
         இசை இசை இசை இசை!
         இனிவரும் புவியினை இசை
         செலுத்துக வைகறை வரும்
         திசை திசை திசை திசை!
(போதையை)

;