சமூக வாழ்க்கையில் இந்துத்துவா காவிமயமும் பொருளாதார வாழ்க்கையில் கார்ப்ப ரேட் தனியார்மயமும் ஒன்றிய பாஜக அரசின் நடைமுறையாகிவிட்டது. நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை எல்லாம் தனியார்மய மாக்கும் பணியில் பாதுகாப்புத் துறையையும் விட்டு வைக்கவில்லை. அதன் முன்னோட்டமா கவே 2021 ஆம்ஆண்டில் பாதுகாப்பு தளவாடத் தொழிலக வாரியத்தின் கீழிருந்த 41 தொழிற்சாலை களையும் தொழிலின், உற்பத்திப் பிரிவின் தன் மைக்கேற்ப ஏழு பிரிவாகப் பிரித்து விட்டார்கள்.
தொழில் நுட்பத்தைக் கொண்டு வந்து இந்தியா வில் உற்பத்தி செய்வது என முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்திருந்த உடன் பாட்டை ரத்து செய்து விட்டு, ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் நடந்த முறைகேடும் வெளிச்சத்துக்கு வந்து அம்பலப்பட்டது மோடி அரசு. இப்போது ஏர் இந்தியா விமான நிறுவ னத்தை டாடாவுக்கு தாரை வார்த்து. சிவில் விமான போக்குவரத்து சொந்தமாக இல்லாத நாடென்ற ‘பெருமையை’ இந்தியா பெற்றிருக்கிறது. பாஜக வின் தனியார்மய தாகம், 2021இல் பாதுகாப்புத் துறையின் ராணுவ விமான உற்பத்தியையும் டாடா குழுமத்துக்கு வழங்கியது. அத்துடன் ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் டிஃபென்ஸ் நிறுவனத் துடன் ஒப்பந்தம் செய்தது 21 ஆயிரம் கோடியில் 56 விமானங்கள் வாங்க. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் உற்பத்தி செய்யப்படும். மீதி டாடா குழுமம் உற்பத்தி செய்யும்.
இந்த விமான உற்பத்தி தொழிற்சாலையை குஜராத்தின் வதோதராவுக்கு வந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் திறந்து வைத்து டாடா ஆலையிலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் முதல் விமானம் வெளியாகும் என்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின் வெற்றி என்றும் கூறியுள்ளார்.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை கைவிட்டுவிட்டு டாடாவுடன் கை கோர்த்த பிரதமர் மோடி, சிவில் விமானங்களின் வடிவமைப்பு முதல் உற்பத்தி வரை இந்தியா மற்றும் உலகின் தேவைகளை நிறைவேற்றுவதில் இந்தத் தொழிற்சாலை முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் வதோதரா விமான உற்பத்தியின் மையமா கவும் மாறும் என்றும் கூறியிருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பாது காப்பு ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாது காப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது என்றும் கூறி பெருமிதப்பட்டிருக்கிறார். இதில் இஸ்ரேலுக்கு டிரோன்களை ஏற்றுமதி செய்வதும் அடங்கும். இத்தகைய ஏற்றுமதி உலகில் போர் தொடர்வதை விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கே உதவும். இந்த பாசிச பாணியிலான இந்துத்துவா பாஜக ஆட்சி அதற்கே சேவகம் செய்யும். இது நாட்டின் பாதுகாப்புக்கும் உதவாது. மக்களுக்கும் பயன்படாது. போர் வெறி பொருளா தாரத்துக்கும் மூலதனத்தின் மூர்க்க லாபத்துக் குமே இந்த தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலை வழி வகுக்கும். அமைதிக்கு சமாதி தான்.