headlines

img

கலப்படம் செய்யாதீர்கள்!

 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசா தமாக வழங்கப்படும் லட்டில் சேர்க்கப்பட்ட நெய்யில் விலங்கின் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திடீர் குற்றச்சாட்டு ஒன்றை கிளப்பிவிட்டார். இதற்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசே காரணம் என்றும் அவர் கூறியிருந்தார். 

ஜெகன் மோகன் ரெட்டி இந்தப் புகாரை மறுத்த தோடு, அவரது கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயு டுவை நோக்கி சரமாரியான கேள்விகளை எழுப்பி யுள்ளதோடு, கடவுளை அரசியலுக்கு பயன்படுத் தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, ‘‘திருப்பதி லட்டு பிரசாதத்தில் மிருகக் கொழுப்பு சேர்க்கப்பட்டது தொடர்பான ஆய்வறிக்கையில் தெளிவு இல்லை. அரசியல் சாசனத்தை கையில் வைத்திருக்கும் முதல்வர் அலுவலகம் கவனமாக இருக்க வேண்டும். லட்டு தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வெளி வந்ததாகக் கூறப்படும் நிலையில், செப்டம் பர் மாதம் கலப்படம் என்று பேட்டியளித்தது ஏன்?  இது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை முடிவு தெரிவதற்கு முன்பே பேட்டியளிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பாஜ கவின் பாணியிலேயே மதவெறியை கிளப்பி விடும் இழிவான முயற்சியில் ஈடுபட்டார் என்பதுதான் உண்மை. 

திருப்பதி கோவிலுக்கு வருவதாக ஜெகன் மோகன் ரெட்டி கூறினார். தெலுங்கு தேசம் கட்சியி னர் இதையும் கூட பிரச்சனையாக்கினர். இந் நிலையில், கிறிஸ்துவரான ஜெகன் மோகன் ரெட்டி கோவிலுக்கு வந்தால் பிற மதத்தவருக் கான நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு கையெ ழுத்திட வேண்டும் என்றெல்லாம் சந்திரபாபு நாயுடு வம்பாக பேசினார். 

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவின் மோசமான - மதப் பகைமையைத் தூண்டும் அரசியலுக்கு குட்டு வைத்துள்ளது. இது ஒருபுறமிருக்க, பழனி தேவஸ்தானம் தயாரிக்கும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலக்கப் பட்டிருப்பதாக மோகன்.ஜி என்பவர் அவதூறு செய்தார். வழக்கு பாய்ந்த நிலையில், முன்ஜாமீன் கோரினார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்  மன்னிப்புக் கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும் என்றும், பழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்றும் விரும்பினால் பழனி கோவி லுக்கு சென்று தூய்மைப் பணி செய்யலாம் என்றும் கூறியுள்ளது. உண்மையில் பக்தர்க ளின் மனதை புண்படுத்துவது மதவெறி அரசிய லில் ஈடுபடுபவர்கள்தான் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.