உரத்த கண்டனம் ஒலிக்கட்டும்!
நாஜிக்களால் இன அழிப்புக்கு உள்ளான யூத இனம் தற்போது மற்றொரு இனத்தை அழிப்ப தில் ஈடுபடுவது எந்த வகை நியாயம்? நாடற்ற வர்கள் என்பதால் ஒரு பகுதியை ஒதுக்கி குடியேற வைத்து புதிய நாட்டை உருவாக்கி னால் ஏற்கெனவே இருந்த நாட்டு மக்களை அழித்து அவர்களின் நாட்டை முற்றிலுமாக ஆக்கிரமிக்கும் வேலையில் ஈடுபடுவது என்ன வகை அறம்சார் செயல்?
பிரிட்டன், அமெரிக்க ஆதரவில் உருவாக்கப் பட்ட இஸ்ரேல், பாலஸ்தீனத்தை முற்றிலுமாக ஆக்கிரமித்து இரு நாடுகள் கொள்கைக்கு எதி ராகச் செயல்படுவதால் தற்போது ஏற்பட்டி ருக்கும் மனிதாபிமான பேரழிவுக்கு - போர்க் குற்றத்துக்கு, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியாக உள்ளார். ஆனால் அவருக்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவி செய்து வருகிறது. இஸ்ரேலின் அனைத்து அழித்தொழிப்பு நடவ டிக்கைகளையும் நியாயப்படுத்தியும் வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசா மீதான தாக்குதலில் இதுவரை 61 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பசியிலும் பட்டினியிலும் ஊட்டச்சத்து குறை பாட்டிலும் உயிரிழந்த குழந்தைகள் நூறுக்கும் மேற்பட்டோர். பொதுவாக போர்க்காலத்தில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் தாக்கப்படு வதில்லை. பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் குறி வைக்கப்படுவதில்லை. ஆனால் இஸ்ரேல் ராணுவமோ இவர்களுடன் கர்ப்பிணிப் பெண்க ளையும் விட்டு வைக்கவில்லை. ஐ.நா. வாகனங் கள், உணவு வழங்கும் முகாம்கள் என அனைத்தும் இந்த அழித்தொழிப்பாளர்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய கொடுமைகளை, அக்கிரமங்க ளை, கோரங்களை உலகுக்கு வெளிப்படுத்தும் ஊடகங்களின் செய்தியாளர்கள், புகைப்படக் காரர்களை குறி வைத்து கொன்று குவித்து சர்வதேச நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து வருகிறது ஜியோனிச இஸ்ரேல் இனவெறி அரசு. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 10 அன்று அல்ஜசீரா செய்தியாளர் அனாஸ் அல் ஷரீப் உள்ளிட்ட 6பேரை இலக்கு வைத்து தாக்கிக் கொன்றுள்ளது. அதை தாங்கள்தான் செய்ததாக வும் அறிவித்துள்ளது. இதுவரை இஸ்ரேலின் கொலை வெறிக்கு பலியான பத்திரிகையாளர்க ளின் எண்ணிக்கை 200ஐ தாண்டும் என்கிறது ஒரு தகவல்.
காசாவுக்குள் சர்வதேச பத்திரிகையா ளர்களை அனுமதிக்க மறுக்கும் இஸ்ரேல், தங்களது ஆக்கிரமிப்பு, அழிவு வேலைகளை உலகம் அறிந்து கொள்ள விடாமல் தடுத்து விடு வதாக நினைக்கிறது. ஆனாலும் பாலஸ்தீனத்தின் சுயாதீனப் பத்திரிகையாளர்களால் அவை வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. பத்திரி கையாளர்கள் படுகொலைக்கு எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பும் செய்தியாளர்கள் பாதுகாப்புக்கான குழுவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது போர்க்குற்றம் என்றும் கூறியுள்ளன. உலகம் முழுவதும் இஸ்ரேலுக்கு எதிராக உரத்த குரலில் கண்டனம் முழங்கிட வேண்டும்.