headlines

img

இரட்டை வேடம் போடாதீர்!

இரட்டை வேடம் போடாதீர்! 

இன்றைய உலக அரசியலில் இந்தியா ஒரு முக்கியமான நாடு. ஆனால் அதன் வெளியுற வுக் கொள்கை ஆபத்தான முரண்பாடுகளால் சூழப்பட்டுள்ளது. ஒருபுறம் பிரிக்ஸ் மேடையில் “பன்முனை உலகம்” என்ற கோட்பாட்டை முன் வைக்கும் பிரதமர் மோடி, மறுபுறம் குவாட் கூட்ட மைப்பில் அமெரிக்காவின் ஆதிக்க நலன்களு க்கு உதவும் கொள்கைகளை ஆதரிக்கிறார். இந்த இரட்டை வேடம் இந்தியாவின் நம்பகத்தன்மை யையும் நீண்டகால நலன்களையும் கேள்விக் குறியாக்குகிறது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடை பெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கப் போகும் பிரதமர் மோடி,  மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதி ராக, வளரும் நாடுகளின் குரலை எழுப்பும் பிரிக்ஸ் அமைப்பின் முயற்சியைப் பாராட்டியுள்ளார். “சமத்துவம், நீதி, ஜனநாயகம்” போன்ற மதிப்பு களை முன்வைத்து, ஒருதலைப்பட்ச உலக ஒழுங்கை எதிர்க்கும் அதன் நிலைபாடு சரியானது என்ற கருத்தை எதிரொலிக்கிறார். பிரிக்ஸ் நாடுக ளின் ஒருங்கிணைந்த பொருளாதார சக்தியைக் குறிப்பிட்டு “பன்முனை உலகின் அவசியம்” குறித்து பேசுகிறார்.

ஆனால் குவாட் மேடையில் இந்தியாவின் நிலைபாடு முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. சீனா வை “சுற்றி வளைக்கும்” அமெரிக்க உத்தியில் இந்தியா ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கூட்டமைப்பில் இந்தியா ஒரு சம பங்காளி யாக இல்லை - மாறாக அமெரிக்காவின் ஆதிக்கக் கனவுகளுக்கு உதவும் ஒரு துணை சக்தியாக  செயல்படுகிறது.

இந்த இரட்டை வேடம் இந்தியாவின் இறையாண் மைக்கு நீண்டகால பாதிப்பை உருவாக்கும். வெளி யுறவுக் கொள்கையில் நிலைத்தன்மை இல்லா மல், வெவ்வேறு மேடைகளில் வெவ்வேறு நிலை பாடுகளை எடுக்கும் நாடு என சர்வதேச அரங்கில் நம்பகத்தன்மையை இழக்கும். இன்று அமெ ரிக்கா இந்தியாவை பயன்படுத்திக் கொள்கிறது; நாளை அதன் நலன்கள் மாறும்போது இந்தி யாவை கைவிடவும் அது தயங்காது.

இந்த கொள்கையின் விளைவாக இந்தியா வின் அண்டை நாடுகளுடனான உறவுகள் மோச மடைந்து வருகின்றன. பாகிஸ்தான், சீனா, மியான்மர், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவுகள் - என எல்லா திசைகளிலும் பிரச்சனைகள் குவிந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கும்.

இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் தெளிவான திசையை நிர்ணயிக்க வேண்டும். ஒரு சுயேச்சையான, அணிசேரா நாடாக தனது நலன்க ளை முன்னிறுத்த வேண்டும். அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் ஆதிக்க கனவுகளுக்கு உதவு வதை விட, தெற்காசியாவில் அமைதியையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.