headlines

img

அழித்தொழிப்பு அல்ல; உரையாடலே தீர்வு!

அழித்தொழிப்பு அல்ல;  உரையாடலே தீர்வு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கான கோரிக் கையை வைத்துள்ள நிலையில் 27 பேர் என்கவுண் ட்டரில் கொல்லப்பட்டது மனிதாபிமானத்திற்கு எதிரான கொடூரமான செயலாகும். இவர்களில் அவர்களின் பொதுச் செயலாளர் நம்பளா கேச வராவும் அடங்குவார். இந்த நிகழ்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.

ஒன்றிய அரசும் பாஜக தலைமையிலான சத்தீஸ்கர் மாநில அரசும் உரையாடல் மூலமான தீர்வைத் தேடுவதற்குப் பதிலாக கொலைகள் மற்றும் அழித்தொழிப்பு எனும் மனிதாபிமானமற்ற கொள்கையைப் பின்பற்றுகின்றன.

ஒன்றிய உள்துறை அமைச்சரின் அறிக்கை கள், காலக்கெடுவை மீண்டும் வலியுறுத்துவதும், சத்தீஸ்கர் முதலமைச்சரின் “பேச்சுவார்த்தைக்கு அவசியமில்லை” என்ற கூற்றும் மனித உயிர்க ளைப் பறிப்பதைக் கொண்டாடும் பாசிச மன நிலையை பிரதிபலிக்கிறது. இது முற்றிலும் ஜனநா யகத்திற்கு எதிரானது.

சமீபத்தில் பல அரசியல் கட்சிகளும் அக்கறை யுள்ள குடிமக்களும் உரையாடலுக்கான மவோ யிஸ்ட்டுகளின் கோரிக்கையைக் கருத்தில் கொள் ளுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்த னர். மாவோயிஸ்ட்டுகளின் அரசியலை நாங்கள் எதிர்த்தாலும், பேச்சுவார்த்தைக்கான அவர்க ளின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொள்ளவும், அனைத்து அழிப்பு நடவடிக்கைக ளையும் நிறுத்தவும் அரசை வலியுறுத்தி, அறிக் கையும் வெளியிட்டிருந்தனர்.

கடந்த இருபது ஆண்டுகளாக சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் ஆதிவாசிகள் இந்த மோதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 16 மாதங்க ளில் மட்டும் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும் அளவில் கைதுகள் நடந்துள்ளன. 40 கிரா மங்கள் அமைதிக்காக கோரிக்கை வைத்துள்ளன என்பது பஸ்தாரில் அமைதிக்கான பரந்த விருப் பத்தை காட்டுகிறது.  ஆனால் அரசு செவி சாய்க்க மறுப்பது ஏன்?

பஸ்தாரில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கார்ப்ப ரேட்டுகளுடன் கையெழுத்தாகியுள்ளன. மாவோ யிஸ்ட் இயக்கத்தை சாக்காக வைத்து சுரங்க நோக் கங்களுக்காக முகாம்களும் நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கனிம வளம் நிறைந்த நிலங்கள் ஆதிவாசிகளின் எதிர்ப்பையும் புறக்கணித்து சுரங்கத்திற்காக நிறுவனங்க ளுக்கு மாற்றப்படுகின்றன. இதன் பொருட்டே, பஸ்தார் ஒரு பெரிய இராணுவ முகாமாக மாற்றப் பட்டுள்ளது. இது மிகப் பெரும் சுரண்டல்; அநீதி ஆகும்.