சவடால் பேச்சு மூலம் சதியை மறைக்க முடியாது
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் தேர்தல் ஆணையம் இந்தளவுக்கு அம்பலப்பட்டு நின்றதில்லை. தேர்தல் ஆணையத்தின் நம்ப கத்தன்மை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிப்ப தன் மூலம் தன்னுடைய சுயேச்சைத்தன்மையை தக்கவைக்க வேண்டிய தேர்தல் ஆணையம் வெற்றுச் சவடால்கள் மூலம் தன்னை தற்காத்துக் கொள்ள முயல்கிறது.
உதாரணமாக வாக்குத் திருட்டு குறித்து குற்றச் சாட்டு எழுப்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதிமொழி பத்திரத்தை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மிரட்டியுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு மாநில தேர்தல் அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
யார் என்ன கூறினாலும், சூரியன் கிழக்கில் தான் உதிக்கும். அதுபோல் அரசமைப்புச் சட்ட கட மையிலிருந்து தேர்தல் ஆணையம் ஒருபோதும் விலகிச் செல்லாது என்று பாஜக தலைவரைப் போல மாறி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் வசனங்களை உதிர்க்கிறார்.
பீகார் மாநில வாக்காளர் பட்டிலிலிருந்து நீக்கப் பட்ட 65 லட்சம் பேரின் விபரங்களை உச்சநீதி மன்றத்திற்கு கூட தர முடியாது என்று தேர்தல் ஆணையம் அடம் பிடித்தது. பின்னர் உச்சநீதி மன்றத்தின் கடும் எச்சரிக்கைக்குப் பிறகே அந்த விபரங்களை தேர்தல் ஆணையம் தர சம்ம தித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கா ளர் பட்டியலை வெட்டிச் சுருக்குகிற வேலையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக பாஜக அரசின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்கின் பிரதிபலிப்பாக சிறுபான்மை மக்க ளின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது. இதுகுறித்து நியாயமான எந்தவொரு விளக்கத்தையும் தேர்தல் ஆணையத்தால் தர முடியவில்லை.
வாக்காளர் பட்டியல் வீடு வீடாகச் சென்று சரிபார்த்த பிறகே தயாரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. அது உண்மையானால், தகுதியான இவ்வளவு வாக்காளர்கள் எவ்வாறு நீக்கப்பட்டார்கள், போலியான முகவரியில் எவ்வாறு நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள் என்கிற கேள்விக்கு தேர்தல் ஆணையத்திடம் பதிலில்லை.
பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிற நிலை யில், பல்வேறு குளறுபடிகளை செய்துள்ள தேர்தல் ஆணையம் அடுத்து தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இத்தகைய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறும் என்று அறிவித் திருப்பது ஏராளமான கேள்விகளை எழுப்புகிறது.
இந்த லட்சணத்தில் தேர்தல் ஆணையம் தொ டர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது ஒன்றிய அரசின் வேலையல்ல என்று அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். இவர்களுக்காகத்தான் தேர்தல் ஆணையம் சதி வேலையில் ஈடு பட்டுள்ளது. இவர்கள் வேறு ஏன் தனியாக பதில் சொல்லப் போகிறார்கள்.