headlines

img

இந்திய பொருளாதாரம்: வளர்ச்சியின் சவால்கள்

இந்திய பொருளாதாரம் தற்போது ஒரு நுட்ப மான மற்றும் சவாலான கட்டத்தைக் கடந்து செல்கிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சி இரண்டிலுமே நாடு குறிப்பி டத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ளது.

வேலைவாய்ப்பின் தற்போதைய யதார்த்தம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி புதிய வேலைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. கடந்த 20 ஆண்டு களில் 19.6 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டி ருப்பதாக அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின் றன. அதில் பெரும்பாலான வேலைகள் 2012-13 மற்றும் 2022-23 இடைப்பட்ட காலகட்டத்தில் உரு வாக்கப்பட்டுள்ளதாக, மோடி அரசு தம்பட்டம் அடிக்கிறது. ஆனால், தற்போது வேலை வளர்ச்சி வெறுமனே ஆண்டுக்கு 26 லட்சம் என்ற அளவில் தான், அவர்களது கணக்குப்படியே உள்ளது.

தொழிற்துறை வளர்ச்சியும் அதே நிலையைக் காண்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியா வின் முக்கிய 8 தொழிற்துறைகளின் உற்பத்தி 10 மாத காலத்தில் மிகக் குறைந்த நிலையை அடைந்துள்ளது. 0.83% சுருக்கம் மற்றும் ஆண்டள வில் வெறும் 2% வளர்ச்சி, பொருளாதாரத்தின் கடும் பலவீனத்தைக் காட்டுகிறது.

துறை வாரியாக பார்க்கும்போது சிலவிதமான மாறுபாடுகள் தெரிகின்றன. கட்டுமான துறையில் சிமெண்ட் உற்பத்தி 7.1% வளர்ச்சி கண்டிருந்தா லும், எஃகு உற்பத்தி வெறும் 1.5% மட்டுமே வளர்ந்துள் ளது. மின்சார மற்றும் எரிசக்தி துறைகளில் கலப் பான முடிவுகள் பதிவாகியுள்ளன.

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான வாய்ப்பு கள் ஏராளம் உள்ளன. சேவைத் துறை, கட்டுமான  மற்றும் கிராமப்புற தொழில்கள், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகள் நம்பிக் கைக்குரிய மையங்களாக உள்ளன. நிபுணர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி 8% வரை அதிகரிக்கக்கூடிய சாத்தி யத்தைக் கூறுகின்றனர். ஆனால், மோடி அரசிடம் அதற்கான திட்டங்கள் இல்லை.

மேலும், பணியமர்த்தல் விகிதம் 69% இருந்து 2050 ஆம் ஆண்டுக்குள் 60% வரைக் குறை யக்கூடிய அச்சம் நிலவுகிறது. இது மிகவும் கவனமாகப் பார்க்கப்பட வேண்டிய அம்சமாகும்.

எதிர்கால வளர்ச்சிக்கான சாத்தியமான தீர்வுகள் பல உள்ளன. தொழில் மயமாக்கலை தீவிரப்படுத்துதல், தேசிய கல்வி மற்றும் பயிற்சி திட்டங்கள், கிராமப்புற பொருளாதார மேம்பாடு, தொழில்நுட்ப மயமாக்கல் மற்றும் ஸ்டார்ட்அப் சூழலை ஊக்குவித்தல் ஆகியவை முக்கிய மாற்று வழிகளாக அமையலாம்.

பொருளாதார நிபுணர்கள் தற்போதைய நிலவரத்தை கவலைக்கிடமாகக் கருதுகின்றனர். ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் நடவடிக்கை களின் மூலம் இந்தச் சவால்களைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் அவர்கள் மத்தி யில் வெளிப்படுத்தப்படுகிறது. எனினும், செயல் திட்டம் எதுவும் மோடி அரசிடம் இல்லை. அதுதான் இந்தியாவின் பெரும் பிரச்சனை.