சீனாவின் பதிலடியால் மிரண்டு நிற்கும் அமெரிக்கா
சீனப்பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 125 விழுக்காடு வரை அதிகரித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்திருந் தார். இதேபோல் மெக்சிகோ, கனடா, இந்தியா என பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்கள் மீதான வரியை யும் கணிசமாக அதிகரித்து உத்தரவிட்டிருந்தார்.அமெரிக்காவின் இந்த அடாவடித்தனத்திற்கு சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள நிலையில் இந்தியா தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவின் நடவடிக்கை கவலை தரக் கூடியது என்று மட்டும் கூறிக்கொண்டார். அமெ ரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய வற்றுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யப்போவதாக அவர் கூறியுள்ளார். இதன்மூலம் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஒன்றிய அரசு உடன்பட்டுவிட்டது போல் தெரி கிறது. இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தி இருப்பதால், இந்தியா மீது நேரடி தாக்கம் அதிகமாக இருக்காது என்று கூறி சமாளிக்கி றார். சர்வதேச அளவிலான வர்த்தக கட்டுப்பாடு கள் இந்தியப் பொருட்கள் மற்றும் சேவைக ளுக்கான கிராக்கியை குறைக்கக்கூடும் என்பதை மோடி அரசு உணரவில்லை.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. உலகளா விய நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, நடப்பு நிதியாண்டிற்கான வளர்ச்சி விகிதம் ஏற்கெ னவே மதிப்பிட்ட 6.7% இலிருந்து 6.5% ஆகக் குறைந்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கை உலகம் முழுவதும் நிச்சயமற்ற தன்மையை தீவிரப் படுத்தியுள்ளது. அமெரிக்க வரிகளின் தாக்கம், நமது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் பிரதிபலிக் கும். 2021-22 முதல் 2023-24 வரை, அமெரிக்கா இந்தி யாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்தது. இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்று மதியில் சுமார் 18விழுக்காடும் இறக்குமதியில் 6.22 விழுக்காடும் அமெரிக்கா கொண்டிருந்தது.
அமெரிக்காவின் அடாவடித்தனத்திற்கு ஆரம்பம் முதல் சீனா கடும் எதிர்ப்பை பதிவு செய்து வந்தது. இந்நிலையில், சீனாவில் இறக்கு மதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை கடுமையாக உயர்த்தி பதிலடி கொடுத் துள்ளது. இதனால் மிரண்டு போன அமெரிக்கா சீனாவுடன் பேச்சு நடத்தப்போவதாக கூறுகிறது.
இந்தியா போன்ற நாடுகளின் பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்வை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும் “ஆபத்து இன்னும் தீரவில்லை” என்றும், “நிச்சய மற்ற தன்மை தொடர்கிறது” என்றும் பொருளாதார நிபுணர் அரவிந்த சுப்பிரமணியன் எச்சரித்துள் ளார். இந்தியா மீதான ஒட்டுமொத்த தாக்கம் “எதிர்பார்த்ததை விட அதிகமாக” இருக்கும் என்று அவர் கூறுகிறார். ஆனால் இதையெல்லாம் மோடி அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.