headlines

img

ஒரு தவறவிட்ட வாய்ப்பு

ஒரு தவறவிட்ட வாய்ப்பு  

இந்தியா 1995 ஆம் ஆண்டு ஆசியான் (ASEAN) அமைப்பின் பேச்சுவார்த்தை கூட்டா ளியாக இணைந்தது. 2022 இல் உச்சி மாநாட்டு பங்கேற்பாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டது. வரலாற்று ரீதியான தொடர்புகளை மீண்டும் புதுப்பிப்பதற்கும், புவிசார் அரசியல் முக்கி யத்துவம் வாய்ந்த ஒரு பகுதியுடன் மீண்டும் இணைவதற்கும் இந்த ஆசியான் மாநாடுகள் இந்தியாவிற்குச் சிறந்த வாய்ப்பை வழங்கு கின்றன.

ஆசியான்-இந்தியா உச்சிமாநாடுகள் மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாடுகள் ஆகிய இரண்டும், அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற சக்திவாய்ந்த நாடுகளுடன் இந்தியத் தலைமை உரையாடுவதற்குரிய தளங்களாக உள்ளன. குறிப்பாக, இந்தோ-பசிபிக் விவகாரங்களில் இது முக்கியமானது.  அக்டோபர் 27, 28 தேதிகளில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் காணொலி உரை யானது, இந்தோ-பசிபிக் மீதான ஆசியான் நாடு களின் மையத்தன்மைக்கும், “இந்தியா-ஆசி யான் ஒற்றுமை”க்கும் ஆதரவளிப்பதாக கூறியது. 2026 ஆம் ஆண்டை ‘இந்தியா-ஆசி யான் நட்பு ஆண்டாக’ அறிவித்ததும் வர வேற்கப்பட்டது. இது கடல்சார் ஒத்துழைப்பு, நீலப் பொருளாதாரம் (Blue Economy), மற்றும் பேரிடர் நிவாரண உதவி ஆகியவற்றுக்கு முக்கியத்து வம் அளித்தது.

ஆயினும், புவிசார் அரசியல் கொந்தளிப்பு கள், அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கை கள், மற்றும் வர்த்தகப் பதற்றங்கள் நிறைந்த இச்சூழலில், ஆசியான் ஈடுபாட்டில் இந்தியா காட்டிய ஆர்வம் குறைவாக இருந்ததாகவே தோன்றுகிறது. மாநாட்டிற்குப் பிரதமர் நேரில் செல்லாமல், காணொலி வாயிலாகப் பங்கெடுத் தது முக்கியப் பங்கேற்பாளர்கள் மத்தியில் உள்ள ஈடுபாட்டின் தீவிரத்தன்மையைச் சற்றுக் குறைத் தது. இருப்பினும், இந்தியா-ஆசியான் பண்டங் கள் வர்த்தக ஒப்பந்தத்தை (AITIGA) விரைந்து இறுதி செய்வது போன்ற சில நேர்மறையான நகர்வுகளும் இந்த மாநாட்டில் நிகழ்ந்தன.

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கர், ரஷ்யாவுடனான வர்த்தகம் மற்றும் விநி யோகச் சங்கிலி நம்பகத்தன்மை பற்றிய கேள்வி களை “சிக்கலானது” என்று விவரித்தது, பிராந் திய விவகாரங்களில் இந்தியா கவனத்துடன் செயல்படுவதைக் காட்டுகிறது. மாநாட்டின் இடையே, பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவு மேம்பாடு மற்றும் இந்தோ-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தப் பதற்றங்கள் ஆகியவை இந்தியப் பிரதமரின் வருகை தவிர்க்கப்பட்ட தற்கு மறைமுகக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.

சீனாவும் அமெரிக்காவும் தங்கள் பிராந்திய இருப்பையும் உறுதிப்பாட்டையும் வலுப்படுத்த முயலும் போது, இந்தியாவின் இந்த விலகல் ஆசிய பிராந்தியத் தலைவர்கள் மத்தியில் இந்தியாவின் பங்கை ஒரு கேள்விக்குறியாக்கி யுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத் தன்மையைத் தக்கவைப்பதற்கும், கூட்டுச் சவால்களைச் சமாளிப்பதற்கும் இந்தியா முழுமை யாகக் களத்தில் இருக்க வேண்டியது அவசியம்.