articles

img

கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு, கூட்டாட்சி சவால்கள் மற்றும் தாய்மொழி உரிமைக் குரல் - கே.பாலகிருஷ்ணன்

கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு, கூட்டாட்சி சவால்கள் மற்றும் தாய்மொழி உரிமைக் குரல்

இந்திய நாட்டில் விடுதலைக்குப் பிறகு மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதும், தமிழ் பேசும் பிரதேசங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அதற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டப்பட்டதும் ஒரு சாதாரண நிர்வாக நிகழ்வல்ல; மாறாக, எண்ணற்ற போராட்டங்களுக்கும், அளப்பரிய தியாகங்களுக்கும் பின் கிடைத்த மகத்தான வரலாற்றுச் சாதனையாகும். கிட்டத்தட்ட விடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பல மாகாணங்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட குறுநில மன்னர்கள், ராஜாக்கள், ஜமீன்தார்கள் போன்றோர் வசம் இருந்த பகுதிகள் அனைத்தையும், மொழி மற்றும் கலாச்சாரப் பண்பாட் டின் அடிப்படையில் ஒருங்கிணைத்தது என்பது ஒரு மகத்தான வரலாற்றுச் சாதனையாகும்.  இன்று, ‘ஒரே நாடு - ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே தேர்தல்’ போன்ற முழக்கங்களுடன் ஒன்றிய  பாஜக அரசு கூட்டாட்சித் தத்துவத்தின் மீதும், மாநில உரிமைகள் மீதும் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில், இந்த வரலாற்றுச் சாதனைகளையும் அதற்காக நடந்த போராட்டங்க ளையும் தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பது அவ சியமாகிறது. மொழிவழி மாநில அமைப்பின் பின்னணியும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளும் விடுதலைக்கு முன்னர், பிரிட்டிஷ் ஆட்சியால் உரு வாக்கப்பட்ட மாகாணங்கள், மொழி, பண்பாடு போன்ற எதையும் கணக்கில் கொள்ளாமல் வெறும் நிர்வாக அமைப்புகளாகவே இருந்தன. 1937 ஆம் ஆண்டில் மாகாணங்களின் எண்ணிக்கை 11 ஆக்கப்பட்டபோதும், இந்த நிலை நீடித்தது. விடுதலைப் போராட்டக் காலத்தி லேயே, காங்கிரஸ் கட்சி 1920 ஆம் ஆண்டு நாக்பூரில்நடை பெற்ற மாநாட்டில் தனது மாநில அமைப்புகளை மொழி வழி அமைப்புகளாக அமைக்கத் தீர்மானித்தது.  1905இல் பிரிட்டிஷ் அரசு வங்கப் பிரிவினையில் ஈடு பட்ட போது, ஒரே மொழி பேசும் மக்களை பிரிக்கக் கூடாது என்றும்; 1908இல் வங்கத்திலிருந்து பீகாரைப் பிரித்தபோது, பீகார் மக்கள் வேறு மொழி பேசுகை யில், பிரிப்பது சரியே என்றும் காங்கிரஸ் சரியான நிலைப்பாட்டை எடுத்தது. ஆனாலும், நாடு விடுதலை அடைந்த பிறகு, அது இந்த நிலைப்பாட்டை காப்பாற்றத் தயங்கியது. காங்கிரஸ் கட்சியின் தயக்கம்: 1948 இல் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா உள் ளிட்டோர் கொண்ட குழு (JVP குழு) கூட, மொழிவழி மாநில அமைப்பு பிரிவினைக்கு வழிவகுக்கும் எனக் கூறி, தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. மொழிவழி மாநிலங்கள் அமைந்தால், அது இந்தியா -பாகிஸ்தான் பிரிவினை போல இன்னொரு அச்சத்தை ஏற்படுத்தும் என்றும், தங்களது ஏகபோக ஆட்சி முறை க்குத் தடையாக இருக்கும் என்றும் காங்கிரஸ் கருதியது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜனசங்கத்தின் எதிர்ப்பு: மறு புறம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விடுதலைப் போராட்டக் காலத்திலேயே மொழிவழி மாநிலங்களை கடுமை யாக எதிர்த்தது. ‘ஒரே நாடு, ஒரு பண்பாடு, ஒரு கலாச் சாரம், ஒரு மொழி’ என்ற சித்தாந்தத்துடன், இந்தியா வின் பன்முகத்தன்மையை நிராகரிக்கும் நிலைப் பாட்டை எடுத்தது. இன்றும் இந்த சித்தாந்தமே இந்தித் திணிப்பு மற்றும் சமஸ்கிருதமயமாக்கல் நடவ டிக்கைகளுக்கு அடிப்படையாக உள்ளது. திராவிட இயக்கத்தின் கோரிக்கை: நீதிக்கட்சி, திராவிடர் கழகம், தி.மு.க. போன்ற திராவிட இயக் கங்கள் கூட, ஆரம்பத்தில் ‘தமிழ்நாடு’ என்ற கோரிக்கை க்குப் பதிலாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்ன டம் ஆகிய மொழிகள் அடங்கிய ‘திராவிட நாடு’ என்ற கோ ரிக்கையை மட்டுமே வலியுறுத்தின. “அடைந்தால் திராவிட நாடு, அடையா விட்டால் சுடுகாடு” என்ற முழக் கத்தையும் வலுவாகக் கொண்டு சென்றனர். கம்யூனிஸ்டுகளின் தத்துவார்த்த அடிப்படையும் தியாகப் போராட்டமும் தேசிய இனங்களின் மொழி மற்றும் பண்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் மார்க்சியச் சிந்தனையின் அடிப்படையில், மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டுமெனத் தொடக்கம் முதலே குரல் கொடுத்தது கம்யூனிஸ்ட் கட்சிதான். இது பல நாடுகள் மற்றும் பல தேசிய இனங்கள் இணைந்துள்ள ஒரு நாடு என்ற சரியான சிந்தனையின் அடிப்படையில் அமைந்தது. 1936 ஆம் ஆண்டிலேயே மொழிவழி மாநி லங்கள் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய துடன், 1946 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் இதையே வலியுறுத்தியது. H ஆந்திரப் போராட்டம்: ஆந்திராவில் தெலுங்கு பேசும் பகுதிகளை உள்ளடக்கி ‘விசால ஆந்திரா’ அமைக்க வேண்டுமென தோழர் பி. சுந்தரய்யா தலைமையி லும், மலையாளப் பகுதிகளை ஒருங்கிணைத்து ‘நவ கேரளம்’ அமைத்திட இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலை மையிலும் கம்யூனிஸ்ட்டுகளே போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினர். ஆந்திராவில், காங்கிர சைச் சேர்ந்த பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதத் தால் உயிர்நீத்த பிறகு, ஏற்பட்ட பெரும் கலவரங் கள், துப்பாக்கிச் சூடு (இதில் 20 பேர் கொல்லப்பட்ட னர்) போன்ற தியாகங்களுக்குப் பின்னரே, 1953 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. H தமிழக ஒருங்கிணைப்பு: தமிழ்ப் பிரதேசங்களை உள்ளடக்கி ‘ஐக்கிய தமிழகம்’ வேண்டுமென்ற போ ராட்டத்தை ப.ஜீவானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் தலைமை தாங்கி நடத்தினர்.  H 1956 பிப்ரவரி 20இல் தமிழ்நாடு எனப் பெயரிடக் கோரி எம்.ஆர்.வெங்கட்ராமன், ஜீவா, கே.முத்தையா உள்ளிட்ட தலைவர்கள் மாபெரும் பேரணி நடத்தினர்.  H கொச்சி-திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இணைந் திருந்த கன்னியாகுமரிப் பகுதிகளைத் தமிழகத்து டன் இணைக்கக் கோரி கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டத்தில், அன்றைய அரசாங்கத்தின் துப்பாக் கிச் சூட்டில் 11 தமிழர்கள் உயிரிழந்தனர். ஐக்கிய தமிழகம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நடந்த மாபெரும் பேரணி மீது காவல்துறை தாக்குதல் நடத்தி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். H இந்தத் தொடர் போராட்டங்கள் வலுப்பெற்றதன் விளைவாகவே, ஒன்றிய அரசு பசல் அலி கமிசனை அமைத்து, அதன் பரிந்துரையின்படி 1956 நவம்பர் 1  ஆம் தேதி தமிழ்ப் பிரதேசங்கள் ஒருங்கிணைக்கப் பட்டு ‘சென்னை மாகாணம்’ என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்கப்பட்டது. இந்த வரலாற்றில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு வைர வரிகளால் எழுதப்பட்டுள்ளது. 1967இல் திமுக அரசு அமைந்த பின்னர், 1968 ஜூலை 18இல், ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டும் தீர்மா னத்தை அன்றைய முதல்வர் அண்ணா அவர்கள் முன் மொழிய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  சட்டமன்றத்தில் தாய்மொழி உரிமைக்கான அழுத்தமான குரல் சென்னை மாகாணத்தை ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனச் சட்டமன்றத்தில் 1952 ஆம் ஆண்டிலிருந்தே கம்யூனிஸ்ட்டுகள் முதலில் குரல் கொடுத்தனர். நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தவர் தோழர் பி. ராமமூர்த்தி  ஆவார். ஆட்சி மொழி, நிர்வாக மொழி, நீதி வழங்கும் மொழி, பயிற்று மொழி எல்லாமே தாய்மொழியாகத் தான் இருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், ஆங்கிலம் மட்டுமே அவை மொழியாக இருந்த நிலையை முறியடித்து, தமிழில் முதலில் உரையாற்றியவர்கள் தோழர்கள் பி.ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம் ஆவர். இன்று, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிகாட்டுத லின்படி, சமஸ்கிருதமயமாக்கல் (சமஸ்கிருத வளர்ச்சிக்கு மற்ற தேசிய மொழிகளை விட 22 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்குதல்) மற்றும் இந்தித் திணிப்பு ஆகியவை முழுவேகத்துடன் செயல்பட்டு, இந்தியாவின் பன் முகப் பண்பாட்டைச் சிதைக்கின்றன. உதாரணமாக, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கோஷம், மாநிலங்க ளின் உரிமைகளை மறுத்து, ஏகபோக ஆட்சிக்கு வழி வகுக்கும் முயற்சி என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தாய்மொழிக் கல்விக்கான அவசியமும் தீர்வும் இந்தித் திணிப்பை எதிர்த்த தமிழ்நாட்டிலேயே, ஆங்கில மோகம் காரணமாக, தாய்மொழிப் புறக்கணி ப்பு ஒரு சோக வரலாறாகத் தொடர்கிறது. தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை தமிழ் புறக்க ணிக்கப்பட்டு, மாணவர்களின் அறிவியல் சிந்தனை முழுமையாக வளராமல் உள்ளது. சமூகத்தில் அடித் தட்டில் உள்ள மக்களுக்கு அந்நிய மொழி ஒரு சுமை யாக அமைந்து, அவர்களின் எதிர்காலத்திற்குப் பெரும் தடையாக உள்ளது. எனவே, மாணவர்களுக்கு வளமான கல்வியை வழங்க, அனைத்து நிலைகளிலும் தாய்மொ ழியே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும். இதற்குத் தேவையான மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பாடப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். மொழிப் பிரச்சனையில் கம்யூனிஸ்ட்டுகளின் தீர்க்க மான நிலைப்பாட்டை, 1968 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தோழர் ஏ. பாலசுப்பிரமணியம் முன்வைத்த கோரிக்கை கள் தெளிவாக உணர்த்துகின்றன: Hஇந்திக்கு அளிக்கும் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். H அரசியல் சட்டத்தின் 8 ஆம் அட்டவணையில் இடம் பெற்றுள்ள அனைத்து மொழிகளும் மத்திய ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். H மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்குத் தத்தம் தாய்மொ ழியிலேயே கடிதம் எழுதிப் பதில் பெறவும், மாநில மொழியே நிர்வாக மற்றும் நீதிமன்ற மொழியாக வும் இருக்க வேண்டும். H எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனை த்து மொழிகளுக்கும் சமமான நிதி வசதி வழங்கப் பட வேண்டும். H அனைத்து மாநிலங்களிலும் உள்ள கல்வி நிலை யங்களில் மாநில மொழியே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே மொழிகளின் சமத்துவமும், இந்திய ஒருமைப் பாடும் நிலைபெறும். தமிழ்நாடு அரசு நவம்பர் 1ஆம் தேதியை மாநில அமைப்பு தினமாகச் சிறப்பாகக் கொண் டாட வேண்டும். அதேசமயம், ஒன்றிய அரசின் கூட்டா ட்சித் தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கைகளையும், மொழித் திணிப்பையும் எதிர்த்துப் போராடி, தமிழ் நாட்டில் அனைத்து நிலைகளிலும் தாய்மொழிக் கல்வியை உறுதி செய்ய வேண்டும்.