headlines

img

அடித்துப் பறிக்கும் ஒன்றிய அரசு!

அடித்துப் பறிக்கும் ஒன்றிய அரசு!

ஒரு மக்கள் நல அரசின் முதன்மைப் பொறுப்பு அதன் குடிமக்களின் நலன்களை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். ஆனால், கடந்த ஒரு தசாப்த மாக இந்தியாவின் ஒன்றிய அரசு மேற்கொள் ளும் கொள்கைகள், குறிப்பாக பெட்ரோலியப் பொ ருட்கள் தொடர்பான வரி மற்றும் விலை நிர்ணய நடவடிக்கைகள், இந்த அடிப்படைச் செயலுக்கு முற்றிலும் எதிரானவையாகவே உள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் 120 அமெரிக்க டாலரை எட்டிய ஒரு பேரல் எண்ணெய்யின் விலை  தற்போது 57.50 டாலருக்கே குறைந்துவிட்டது. இதுபோன்ற விலை வீழ்ச்சி நேரத்தில் மக்களுக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இய ல்பானது. ஆனால், ஒன்றிய அரசு இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவ தற்கு பதிலாக, கலால் வரியை மேலும் 2 சதவிகி தம் உயர்த்தியுள்ளது. இதனுடன் சமையல் எரிவாயு வின் விலையையும் ரூ.50 அதிகரித்திருக்கிறது. 

மக்களுக்கு கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச நிவாரணத்தையும் இடைமறித்துப் பறிப்பது ஒரு போதும் மக்கள் நல அரசின் செயலாக இருக்க முடியாது. அது மக்கள் விரோத அரசின் செய லாகவே இருக்கும். 2014-ஆம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலராக இருந்தபோது, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71-க்கு விற்பனையானது. இன்று, எண்ணெய் விலை 42.5 சதவிகிதம்  குறைந்தும் பெட்ரோல் விலையை ரூ.101.03 என உயர்த்தியுள்ளது. சரியான விலை நிலைநாட்டப்பட்டால் பெட்ரோல் ரூ.40.83-க்கே விற்கப்பட வேண்டும்.

ஒன்றிய அரசு தற்போது ஒரு லிட்டர் பெட்ரோ லில் மட்டுமே 50 சதவிகிதம்  வரியை விதிக்கிறது. இதில் கச்சா எண்ணெய் விலை 35 சதவிகிதம், மீதமுள்ள 15 சதவிகிதம் உற்பத்தி மற்றும் லாபம் என கணக்கிடப்படுகிறது. ஒன்றிய அரசின் வரி விதிப்பு கொள்கைகள் “மக்களின் நலனுக்கான ஆதரவு” எனும் அடிப்படை நோக்கத்திலிருந்து விலகி, மக்கள் வயிற்றில் அடித்து பணத்தை பறிப்பது என மாறியிருக்கிறது. 

இத்தகைய வரிவிதிப்புகள் மூலம், 2023-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசிற்கு பெட்ரோலியப் பொ ருட்களிலிருந்து மட்டும் ரூ.3.7 லட்சம் கோடி வரு வாய் ஏற்பட்டுள்ளது. இதே ஆண்டில், ரிலை யன்ஸ் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு  அளித்த சலுகைகளால்  அந்நிறுவனம்  ரூ.3.4 லட்சம் கோடி லாபமடைந்திருக்கிறது. இது தனியார் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு கிடைக்கும் ஆதரவும், மக்களுக்கு ஏற்படும் சுமையும் எவ்வளவு முர ணாக உள்ளன என்பதைக் காட்டுகிறது.

மக்களுக்கு வரிச் சுமையை அதிகரித்து, கார்ப்ப ரேட்களுக்கு சலுகைகள் வழங்கும் மோடி தலை மையிலான ஒன்றிய அரசு, மக்கள் நலனுக்கான ஒரு அரசு அல்ல என்பது மிகத் தெளிவாகிறது. இதனை, வரலாறு ஒரு மக்கள் விரோத ஆட்சி எனப் பதிவு செய்யத் தயங்காது.