உலகிற்கே உயிர் கொடுத்து வரும் அமேசான் காடு இன்று கார்ப்பரேட்களின் லாபவெறி யால் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இந்த பூவுலகின் 55 லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அமேசான் காடுகள்தான், இன்றும் அரிய உயிரினங்களின் புகலிடமாக இருந்து வருகிறது. அரிய வகை ஜாக்குவார் சிறுத்தை, அனகோண்டா பாம்புகள், ஆட்களை கொல்லும் எலக்ட்ரிக் ஈஸ்ல் என்ற மீன், விஷத் தவளைகள், ஆட்கொல்லி வவ்வால் உள்ளிட்ட ஏராளமான அரிய வகை உயிரினங்கள் இங்கு இருக்கின்றன. உலகில் வெளியிடப்படும் மொத்த கார்பனில் 25 விழுக்காடை இந்த காடுகளே உள்வாங்கி வெப்ப மயமாதலை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின் றன. உலகிற்கு தேவையான ஆக்ஸிஜனில் 20 விழுக்காட்டை உருவாக்கிக் கொடுப்பதோடு, மனி தர்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 40 விழுக்காட் டையும் தருவது இந்த காடுகளே. அப்படிப்பட்ட அமேசான் காடு கடந்த 20 நாட்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இடதுசாரி அரசுகள் இருந்த வரை கார்ப்பரேட் களால் உள்ளே நுழைய முடியவில்லை. வலதுசாரி அரசு அமைந்தவுடன் முதல் வேலையே அமே சான் காடுகளை அழிப்பதாகத்தான் இருந்தது. கடந்த ஜூலை மாதம் மட்டும் 1345 சதுர கி.மீட்டர் அளவுக்கு மரங்கள் வெட்டப்பட்டன. அரசு தடுக்கவில்லை. காடுகள் அழிக்கப்படுவது தொடர்பான செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகின. உடனே பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி முகமையின் தலைவரை பணிநீக்கம் செய்தார் ஜனாதிபதி. அடுத்து சுரங்க நிறுவனங்க ளை அனுமதிக்க அரசு முடிவு செய்தது. அதற்கு எதிராக பழங்குடிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றனர். இதையடுத்தே அமேசான் காடுகள் தீவிர மாக பற்றியெறிய துவங்கியிருக்கின்றன. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 72,843 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 83 சதவிகிதம் அதிகம் ஆகும். நிதிமூலதனத் தின் லாபவெறிக்கு இந்த பூமியின் நுரையீரலில் தீ பற்றவைக்கப்பட்டிருக்கிறது. இதனை உடனே அனைத்து நிதிமூலதனத்தின் லாபவெறிக்கு தீ வைத்தால்தான் நாம் உயிர் பிழைக்க முடியும்.