headlines

img

கல்வித்துறையில் சாதனை படைத்த தென்மாநிலங்கள்

இந்தியா முழுவதும், 2019 ஆம் ஆண்டை விட, 2024 ஆம் ஆண்டில், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தாமல், நடுநிலை-உயர்நிலை பள்ளிகளில் தொடர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் கேரளம் முதல் இடத்தையும் தமிழ்நாடு 3ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளன. ஒன்றிய அரசின் கல்வி அமைச்ச கம் நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு கேரளாவில் 5 ஆம் வகுப்பில் 100 மாணவர்கள் சேர்ந்தபோது அவர்களில் 99.6 விழுக்காட்டினர் தொடர்ந்து படித்து 8 ஆம்வகுப்பை அதாவது நடுநிலைப் பள்ளியை முடித்தார்கள். அந்த விழுக்காடு 2024 ஆம் ஆண்டு 100 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 2019இல் 99 விழுக்காடாக இருந்தது. கடந்தாண்டு இது100 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதேபோல, மாணவியர் எண்ணிக்கையிலும் இந்த இரு மாநிலங்களும் பெரும் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியுள்ளன. இதனால்  கேரளாவிலும் தமிழ கத்திலும் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடு வோர் எண்ணிக்கை இல்லாத நிலை ஏற்பட்டுள் ளது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

அதேபோல, கேரளாவில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் 2019-இல் 88.3  விழுக் காடாக இருந்தது. இது கடந்தாண்டு 95.7 விழுக்கா டாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இந்த விழுக் காடு 2019இல் 81.3 என இருந்தது 2024-இல் 89.2 ஆக உயர்ந்துள்ளது. மாணவிகளைப் பொறுத்த வரை கேரளாவில் 2019இல்  93.2 விழுக்காடாக இருந்த உயர்நிலை பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவிகளின் விழுக்காடு 2024இல் 97.5 ஆக உயர்ந்துள்ளது. அதாவது வெறும் 2.5 விழுக் காட்டினரே படிப்பை பாதியில் கைவிடுகிறார்கள்.  இந்த இரண்டு மாநிலங்களும் பள்ளி கல்வித் துறையில் வீறு நடைபோடும் நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களின் நிலையோ  பரிதாபமாக உள்ளது.

பீகாரில் 2019இல் பள்ளிப் படிப்பை முடித்த  மாணவர்கள் விழுக்காடு 78.6 ஆக  இருந்தது. இது 2024-இல் 65 விழுக்காடாக வீழ்ச்சியடைந்து விட்டது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019-இல் 81.1 விழுக்காடாக  இருந்தது 2024-இல் 65.4 விழுக் காடாக குறைந்து மோசமான நிலைக்குச் சென்றுள் ளது.  பீகாரில் உயர்நிலைப் பள்ளியிலும் மாணவர்க ளின் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான அசாமில் மிக மோசமான நிலையே காணப்படுகிறது. குஜராத் மாநிலத்திலோ எந்த முன்னேற்றமும் இல்லை. 

தமிழகத்தில் பள்ளிப் படிப்பில் சேரும் குழந் தைகள் அனைவரும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக அரசு செயல்படுத்தி வரும் காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆகியவை இடை நிற்றலை குறைத்துள்ளன. இப்படி பல துறைகளில் சாதனை படைக்கும் தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களுக்குதான் ஒன்றிய அரசு போதிய நிதியை ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது.